ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இன்று (23) அதிகாலையில் பாரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனைத்தொடர்ந்து இஸ்ரேல் புதிய தொடர் தாக்குதல்களை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
அதேவேளை ஈரானிய தலைநகரின் ஐந்து பகுதிகளில் வான்வழித் தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், சேதம் தொடர்பிலான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பதிவிட்டுள்ளது.
இந்த தாக்குதல்கள் 1, 4, 11, 13 மற்றும் 21 ஆகிய மாவட்டங்களில் நிகழ்ந்துள்ளன.
இஸ்ரேலின் இராணுவம் வெளியிட்ட அறிக்கையில், “தெஹ்ரானில் உள்ள ஈரானிய பயங்கரவாத ஆட்சியின் உள்கட்டமைப்பைக் குறிவைத்து ஒரு பரந்த அளவிலான தொடர் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக” அறிவித்துள்ளது.
இதற்கிடையில், ஈரானின் உர்மியா மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் உயிரிழப்புகள் மற்றும் பெரும் சேதங்கள் ஏற்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.