தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 3 பேர் குழந்தைகள் ஆவர். துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு; பிரிட்டோரியா நகருக்கு அருகில் சவுல்ஸ் வில்லே டிவுன்ஷிப் பகுதியில் மதுபான விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதி உரிய முறையில் உரிமம் பெறப்படவில்லை.
இந்த விடுதிக்குள் அடையாளம் தெரியாத 3 பேர் நுழைந்துள்ளனர். அப்போது அங்கு எப்போதும் போல் பலர் அமர்ந்து, மதுபானம் அருந்திக் கொண்டு இருந்தனர். யாரும் எதிர்பாராத தருணத்தில் இந்த 3 பேரும் அங்குள்ளோர் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர்.