தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணித்தலைவர் ஷுப்மன் கில் விளையாடுவது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது.
முதலாவது போட்டியின்போது கழுத்து உபாதைக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கில் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியபோதும் இன்று காலை கொல்கத்தாவில் இந்தியா கொண்டுள்ள பயிற்சியில் பங்கேற்க மாட்டாரென எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது டெஸ்ட் நடைபெறும் குவஹாத்திக்கு இந்தியா புதன்கிழமை (19) பயணமாகவுள்ள நிலையில், கழுத்து உபாதையிலிருந்து குணமடைபவர்களுக்கு விமானப் பயணம் உகந்ததல்ல என்ற நிலையில் அன்று அணியுடன் கில் பயணிக்க மாட்டாரெனத் தெரிகிறது.
கில் விளையாடவிட்டால் சாய் சுதர்ஷன் அல்லது தேவ்டுட் படிக்கல் அணியில் அவரைப் பிரதியிடுவரென எதிர்பார்க்கப்படுகிறது.