தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர இன்று(16) காலை காலமானார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் காலமானார்.
62 வயதான ஆளுநர் ஹரிச்சந்திர ஒரு மூத்த நிர்வாக அதிகாரியாக கடமையாற்றியுள்ளார்.
மேலும், அமைச்சகத்தின் செயலாளர், மாவட்ட செயலாளர் மற்றும் பல முக்கிய பதவிகளை அவர் வகித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.