அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று (30) தென் கொரிய விமானப்படை தளத்தில் சீனத் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்துள்ளார்.
இந்த சந்தித்த பின்னர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப் பிரச்சினைகள் குறித்து முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளார்.
இரு நாடுகளும் ஏறக்குறைய எல்லாவற்றிலும் ஒரு உடன்பாட்டிற்கு வந்துள்ளன என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஆசியாவில் தனது மூன்று நாடுகளுக்கான பயணத்தை முடித்த பிறகு பேசிய ட்ரம்ப், சோயாபீன்ஸ் இறக்குமதி, அரிய மண் மற்றும் ஃபெண்டனைல் விவகாரங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் காரணமாக, சீனப் பொருள்கள் மீதான ஒட்டுமொத்த வரிகள் 57 வீதத்திலிருந்து 47 வீதமாகக் குறைக்கப்படும் என்று தெரிவித்தார்.