துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய நால்வர் அடையாளம்!

அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு நபர்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு 12 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் குறிப்பிட்டார்.

“இந்தக் குற்றவாளிகள் பயணித்ததாகக் கூறப்படும் வாகனம் தீப்பற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இது தொடர்பாக ஊடகங்களில் எவ்வளவு தகவல்கள் வெளியானாலும், இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கை கிடைத்த பின்னரே நாம் இதனை உறுதிப்படுத்துவோம். எமக்கு அவ்வாறு தோன்றினாலும், இது 100 வீதம் அந்த வாகனம் தான் என்று எம்மால் கூற முடியாது.

இந்தச் சம்பவத்துடன் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் மாத்திரம் தொடர்புபடவில்லை. இதில் தொடர்புடைய இன்னும் பல நபர்கள் உள்ளனர். இது தொடர்பாக நான்கு நபர்கள் குறித்து எமக்கு வெற்றிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பிற்கு வருவதற்கு முன்னரும் மற்றுமொரு தகவல் கிடைத்தது. இன்னும் ஒரு சில நாட்களில் இதனைத் தீர்க்க முடியும் என நம்புகிறோம்.

இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர கவனம் செலுத்தியுள்ளனர். சட்டத்தரணி தொடர்பாக பொலிஸார் என்ற ரீதியில் நாம் எதனையும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

சில விடயங்கள் ஊடகங்கள் வாயிலாகப் பிரச்சாரம் செய்யப்பட்டன. நாம் அந்தத் தகவல்களை 100 வீதம் அங்கீகரிக்கவோ அல்லது நிராகரிக்கவோ இல்லை. இந்த விசாரணை நடவடிக்கைகள் மிகவும் நுணுக்கமானவை. தற்போது பெருமளவிலான பணிகள் நிறைவடைந்துள்ளன.

வெளியிடக்கூடிய விடயங்களை மாத்திரமே நான் வெளியிடுகிறேன். சில விடயங்களை வெளியிட்டால், அது விசாரணைக்குத் தடையாக அமையலாம்.

சில விடயங்களை நாம் நிராகரிக்கவில்லை, அவை உண்மையாகவோ அல்லது பொய்யாகவோ இருக்கலாம். ஒரு சட்டத்தரணி எந்தவொரு குற்றவாளிக்காகவும் நீதிமன்றில் முன்னிலையாக முடியும்.

அவர் முன்னிலையான வழக்குகள் குறித்து நாம் விசாரணை நடத்தி வருகிறோம். குறித்த சட்டத்தரணி குறிப்பிட்ட சந்தேகநபருக்காக அல்லது குற்றவாளிக்காக முன்னிலையாவது குறித்து பொலிஸார் தற்போது விசாரணை நடத்தவில்லை என்று எம்மால் நேரடியாகக் கூற முடியாது.

இது தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகள் முடிவடைந்து, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட பின்னரே நாம் இது குறித்து கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.” என்றார்.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.