திறைசேரியின் பணம் இனந்தெரியாத தரப்பினரின் கைக்குச் சென்ற சம்பவமானது ஹேக்கர்களின் (Hackers) செயல் என்று நம்ப முடியாது என சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இச்சம்பவம் குறித்து நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டுமாயின், திறைசேரி செயலாளரும் சம்பந்தப்பட்ட அமைச்சரும் தமது பதவிகளில் இருந்து விலக வேண்டும் எனவும் தெரிவித்தார்.