தித்வா புயல்; புதைந்த வாகனங்களை மீட்டெடுக்க முடியாத நிலை!

நாட்டில் ஏற்பட்ட தித்வா புயல் காரணமாக நுவரெலியா மாவட்டமும் அதிகம் பாதிக்கப்பட்டது. இதில் வெலிமடை – நுவரெலியா பிரதான வீதியில் ரேந்தபொல பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் மொத்தமாக நான்கு வாகனங்கள் புதைந்தன அவற்றில் சில வாகனங்களை இன்றுவரை மீட்டெடுக்க முடியாத நிலை காணப்படுகின்றன.

இதே மண்சரிவில் புதையுண்டு எட்டு பேர் உயிரிழந்தனர் இவர்களின் உடல்களை நீண்ட போராட்டத்திற்கு மத்தியில் சில நாட்களுக்குப் பிறகே மீட்கப்பட்டன காரணம் மீட்பு பணியின் போது இடையூறு ஏற்படும் வகையில், அடிக்கடி மழையும் பெய்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

குறித்த பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில் – நவம்பர் 27ஆம் திகதியன்றும் காலையிலிருந்து வழக்கமான மழைதான் பெய்துகொண்டிருந்தது. பிற்பகலுக்கு மேல் மழையின் தீவிரம் அதிகமானது மாலையில் திடீரென சேறும் சகதியும் கலந்த மண், கற்கள், ராட்சர பாறைகள் உருண்டு வந்தது.

வீடுகள் முன் மற்றும் வீதியோரங்களில் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ,வேன்,லொறி மற்றும் முச்சக்கரவண்டி என நான்கு வாகனங்களும் வீட்டு உபயோக பொருட்களும் அடித்து செல்லப்பட்டு, மண்ணில் புதைந்தன.

மேலும் 4 வீடுகள் மண் சரிவில் முழுமையாக சிக்கிக் கொண்டது மேலும் சில வீடுகள் மீது பாறைகளும் விழுந்துள்ளது இன்றுவரை அவற்றை அகற்ற முடியாத நிலையில் உள்ளோம் என தெரிவித்தனர்.

இதனால் இன்றுவரை மீட்க முடியாத வாகனங்களில் மேல் பாரிய கற்பாறைகள் காணப்படுவதால் அவற்றை சிறிது சிறிதாக அப்புறப்படுத்தி வாகனத்தில் உள்ள சேதமான பாகங்களை மாத்திரம் மீட்டெடுக்க கூடியதாக உள்ளது எனவும் தெரிவித்தனர்.

மண்சரிவின் போது உடனடியாக இடம்பெயர்ந்து மக்கள் பாதினாவெல முஸ்லிம் வித்தியாலயம், ரேந்தபொல தமிழ் வித்தியாலயம், பள்ளிவாசல் மற்றும் அம்பேவல பள்ளிவாசலில் தங்க வைக்கப்பட்டனர்.

இருந்தும் அவர்களுக்குத் டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கும் அவர்களின் வீடுகளை மறுவாழ்வு செய்வதற்கும் அரசாங்கம் வழங்கும் ரூ.25,000 உதவித்தொகை இதுவரை கிடைக்கவில்லை என்றும் குற்றம் சுமத்துகின்றனர்.

நுவரெலியா மாவட்டத்தில் தற்சமயம் சீரான காலநிலை காணப்படுகின்றன இருந்தும் சமீபத்திய மோசமான மழைப்பொழிவு காரணமாக ஏற்கனவே மண்சரிவுகள் ஏற்பட்டுள்ள பல பகுதிகள் உள்ளன அவற்றில் அபாயகரமான வெடிப்புக்களும் உள்ளன இனி வரும் நாட்களில் சிறிதளவு மழை பெய்தாலும், அந்தப் பகுதிகள் ஏதோ ஒரு வகையில் சுறுசுறுப்பாக மாறி மீண்டும் மண்சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதனால் நுவரெலியா பிரதான வீதியில் ரேந்தபொல பகுதியில் சுற்றியுள்ள சூழல் குறித்து தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு பொதுமக்களை வலியுறுத்தி உள்ளது.

o

யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

March 3, 2026

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான

mano

இந்திய உயர்ஸ்தானிகரிடம் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகள் முன்வைப்பு!

March 3, 2026

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்

xoo

கொழும்பு பங்குச்சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி

March 3, 2026

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சியை இன்று (03) சந்தித்தது. இதன்படி அனைத்துப்

Poli

தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

March 3, 2026

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த

jud

விளக்கமறியல் கைதிக்கு பிணை வழங்க இலஞ்சம் வாங்கிய நபருக்கும் விளக்கமறியல்

March 3, 2026

சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்குப் பிணை பெற்றுக்கொடுக்க உதவுவதற்காக, அவரது குடும்ப

pera

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பேராயர் சந்திப்பு

March 3, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு