அரச நிறுவனங்களில் பதவிகளை மாற்றுவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்க, இன்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, அரச நிறுவனங்களில் தலைவர்கள், பணிப்பாளர்கள், குழுத் தலைவர்கள் உள்ளிட்ட பல பதவிகளில் எதிர்வரும் நாட்களில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதன்போது தெரிவித்துள்ளார்.