தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான திகதி?

தமிழகத்தில் ஆளும் திமுக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-திகதியுடன் நிறைவடைகிறது.

இதேபோல், புதுச்சேரி (ஜூன் 15), மேற்கு வங்காளம் (மே 7), அசாம் (மே 20), கேரளா (மே 23) ஆகிய மாநிலங்களின் பதவிக்காலமும் முடிவடைகிறது.

எனவே, இந்த 5 மாநிலங்களில் உள்ள 824 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக, ஒவ்வொரு மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் தேர்தல் வன்முறை குறைவு என்பதால், எப்போதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.

வடமாநிலங்களில்தான் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகின்றன.

அந்த வகையில், தற்போது நடைபெற உள்ள 5 மாநில தேர்தலை கண்காணிக்க 714 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், 233 ஐ.பி.எஸ் அதிகாரிகளும் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 497 செலவின பார்வையாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி நடைபெற்றது. ஆனால், வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2ஆம் திகதியே நடந்தது.

கொரோனா காலம் என்பதால், அப்போது முன்கூட்டியே தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால், இந்த முறை வெயிலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மே மாதம் தமிழக சட்டசபை தேர்தலை நடத்தலாமா? என்று தேர்தல் ஆணையம் யோசித்து வருகிறது.

ஏற்கனவே, 5 மாநில தேர்தல்களை 5 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ள நிலையில், அதில் கடைசி கட்டமாக தமிழக சட்டசபை தேர்தல் நடத்தப்படலாம் என தெரிகிறது.

தமிழகத்தில் கடந்த 1952-ம் ஆண்டு முதல் சட்டசபை தேர்தல்கள் நடைபெற்று வந்தாலும், ஆரம்பத்தில் ஜனவரி, பெப்ரவரி, மார்ச் மாதங்களிலேயே தேர்தல் நடந்துள்ளது.

அதன்பிறகு பெரும்பாலும் மே மாதமே சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு, 2001 (மே 10) 2006 (மே 8), 2016 (மே 16) ஆகிய ஆண்டுகளில் மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்றுள்ளது. 2011 (ஏப்ரல் 13), 2021 (ஏப்ரல் 6) ஆண்டுகளில்தான் ஏப்ரல் மாதமே தேர்தல் நடந்துள்ளது.

அந்த வகையில், இந்த ஆண்டும் தமிழகத்தில் மே மாதமே சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது. இந்த நிலையில், தேர்தல் தொடர்பான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ்குமார் தலைமையில் 7 பேர் கொண்ட குழு 3 நாட்கள் பயணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு வருகை தந்தது.

புதுச்சேரி மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் தொடர்பான ஏற்பாடு பணிகளை ஆய்வு செய்து மாநிலத்தேர்தல் ஆணையர் மற்றும் அனைத்து கட்சி முக்கிய பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் காவல்துறையுடன் ஆலோசனை நடத்தின.

பின்னர் சென்னையில் இந்திய தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு கூட்டங்களை நடத்தியது.

இந்த சூழலில் 3 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து இந்திய தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழுவினர் டெல்லி புறப்பட்டு சென்றனர்.

இந்நிலையில் இன்னும் ஓரிரு வாரத்தில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு வெளியாகும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

crude

5 நாட்களில் 82 டொலராக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை

March 3, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய கிழக்கு முழுவதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால்

ha

ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் போன்ற தரப்புகளுக்கு இடம்பெற்ற வன்முறைகள் குறித்து ஆராய ஆணைக்குழு வேண்டும் – ஹக்கீம் எம்.பி

March 3, 2026

யுத்த காலங்களில் ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் போன்ற தரப்புகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடூரங்கள் குறித்து உண்மைகளைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு

inla

ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் கட்டாயமாக்கப்படும் நடைமுறை

March 3, 2026

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் கட்டாயமாக்கப்படும் TIN சான்றிதழ் தொடர்பான புதிய நடைமுறை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

up

தோட்ட உதவி அத்தியட்சகருக்கு எதிராக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

March 3, 2026

கொட்டகலை, யுலிபீல்ட் தோட்ட உதவி அத்தியட்சகருக்கு எதிராக குறித்த தோட்டத் தொழிலாளர்கள் நேற்று திங்கட்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். குறித்த

Suresh orema

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை ஆரம்பிக்க உரிய அழுத்தங்களை வலுவாகப் பிரயோகிக்க வேண்டும் – சுரேஷ் பிரேமசந்திரன்

March 3, 2026

மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துவதற்கும், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை ஆரம்பிப்பதற்கும் உரிய அழுத்தங்களை வலுவாகப் பிரயோகிக்கவேண்டிய பொறுப்பு சகல தரப்பினருக்கும் இருப்பதாக

Thumi_1

இன்று நாட்டில் அரசியல் இலாபத்திற்காகவே மத – இன அடையாளங்கள் பயன்படுத்தப்படுகின்றன – துமிந்த நாகமுவ

March 3, 2026

இன்று நாட்டில் பெரும்பான்மையாகச் சிங்கள பௌத்தர்கள் இருப்பதனால் சிங்கள பௌத்த அடையாளத்தை முன்னிறுத்தியே நாமல் ராஜபக்ஷ அரசியல் செய்வதாக முன்னிலை

ud

குவைத்தின் வான் பாதுகாப்புப் படையினரால் அமெரிக்க விமானங்கள் சுடப்பட்டதா?

March 3, 2026

வைத்தின் வான் பாதுகாப்புப் படையினரால் அமெரிக்காவின் மூன்று F-15E ஸ்டிரைக் ஈகிள் போர் விமானங்கள் தவறுதலாகச் சுடப்பட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க

arrest

போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

March 3, 2026

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்தில் குஷ் ரக போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை (02)

death-pictures-4i5d2eg6pdb913xl

யாழ் குடத்தனையில் இளைஞன் தற்கொலை?

March 3, 2026

யாழ்ப்பாணம், குடத்தனை வலிக்கண்டிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த இளைஞர் ஒருவர், தன் உயிரை மாய்த்துக்

Duba

மூடப்பட்டிருந்த டுபாய் விமான நிலையங்கள் மீண்டும் திறப்பு

March 3, 2026

ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக மூடப்பட்டிருந்த டுபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் மக்தூம் சர்வதேச விமான

Mano

ஜனாதிபதி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி செயலில் முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டும் – மனோகணேசன்

March 2, 2026

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க என்ற ஒற்றைச் சில்லை வைத்துத்தான் ஒட்டுமொத்த அரசாங்கமும் ஓடுகிறது. அவர் யாழ்ப்பாணத்துக்குச் செல்கிறார். அங்கு நடைப்பயிற்சி

s

ஸ்பெயினில் உள்ள அமெரிக்கத் தளங்களைப் பயன்படுத்த அந்நாட்டு அரசாங்கம் தடை

March 2, 2026

ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஸ்பெயினில் உள்ள அமெரிக்கத் தளங்களைப் பயன்படுத்த அந்நாட்டு அரசாங்கம் தடை