தமிழ் கட்சிகள் ஒருமித்து கிவுல் ஓயா திட்டத்தை முற்றாக எதிர்க்கும் வகையில் செயற்படத் தீர்மானம்!

தமிழ் கட்சிகள் ஒருமித்து, ஐக்கியமாக செயல்பட்டால் இழந்த உரிமைகளை மீட்டு பெற முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

நேற்று(05-02-2026) அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் தமிழர்களின் நிலங்களை அபகரிக்கும் நோக்கத்துடனும், சிங்களக் குடியேற்றங்கள் கொண்டு வரும் நோக்கத்துடனும் ஜே.ஆர். ஜெயவர்த்தனா காலத்தில் கிபுல்ஓயா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கிடையிலான நில ரீதியான தொடர்புகளை அறுக்கவும், சிங்கள குடியேற்றங்களின் மூலம் தமிழர்களின் இன விகிதாசாரத்தை குறைக்கவும் இந்த நீண்டகாலத் திட்டம் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது ஜே.ஆர். ஜெயவர்த்தனாவைத் தொடர்ந்து, பிரேமதாச, டி.பி. விஜயதுங்க, சந்திரிகா, மஹிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால் சிறிசேன தலைமையில், தற்போது அநுர அரசு காலத்திற்கும் தொடரப்படுகிறது.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த அந்த காலத்தில் அதிகாரத்தில் இருந்தவர்கள் சிறிய அளவிலான முயற்சிகளை மேற்கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக, இன்று இந்த திட்டத்தின் மூலம் உட்கட்டமைப்பு, குடிநீர் வசதி, காணி போன்ற பல்வேறு திட்டங்களை அமல்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்பாக, 4000 ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டு நீர்ப்பாசன திட்டங்கள் உருவாக்கப்பட்டு, சிங்கள குடியேற்றங்களை நிறுவ இன்றைய ஆட்சி செயல்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எனக்கு சிங்கள மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கியதாக செய்திகள் வெளியிட்டுள்ளனர்.

நான் அதனை முழுமையாக மறுக்கிறேன், அது அப்பட்டமான கருத்தாகும் என்றும், அவரது காழ்புணர்ச்சியின் வெளிப்பாடாகவே நான் பார்க்கிறேன்.

ஆரம்பத்திலேயே நாடாளுமன்ற உரைகளில் இந்த விடயங்களை பேசியும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தேன். சிறிய வயதிலேயே இந்த பிரதேசத்தில் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு, தமிழரின் உரிமைகள் மீட்க போராடியுள்ளேன்.

திருகோணமலையில், எனது அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டபோதும், நான் எந்த ஆட்சியிலும் சிங்கள குடியேற்றத்திற்கு ஆதரவு தெரிவித்ததாக இல்லை. ஆனால், அந்த அரசாங்கங்களை பயன்படுத்தி அபிவிருத்திகளை முன்னெடுக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம்.

நாங்கள் ஒருமித்து, தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடும் கட்சியின் அடிப்படையில், சிறுபான்மை கட்சிகளுடன் இணைந்து செயல்படுகிறோம்.

தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்படும் அனைத்து ஒடுக்குமுறைகளையும், தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால், இழந்த உரிமைகளை மீட்டு பெற முடியும் என வலியுறுத்தியுள்ளார்.

anu

ஜனாதிபதியின் அவசரத் திட்டம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான உடனடி

ne

காட்டு யானைகளால் சிறைக் கைதிகளின் நெற்செய்கை அழிந்தது!

March 4, 2026

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த மூன்று ஏக்கர் நெற் செய்கை காட்டு யானை

vi

நடிகர் விஜயை பின்தொடர்ந்தவர்கள் மருதத்துவமனையில் அனுமதி

March 4, 2026

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவரும் நடிகரான விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற இரண்டு இளைஞர்கள் விபத்தில்

42

ஆடைத் தொழிற்சாலை பெண் ஊழியர் கொலை ; சந்தேக நபர் தப்பியோட்டம்

March 4, 2026

கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை வளாகத்தினுள் பெண் ஊழியர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

iran

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரான் கப்பலில் இருந்தவர்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்கள்!

March 4, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேருக்கு காலி கராபிட்டிய

eng

இங்கிலாந்து பிறீமியர் லீக்:வொல்வ்ஸிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்

March 4, 2026

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான

rana

இலங்கை கிரிக்கெட் சபை பாரியதொரு தவறைச் செய்தது!

March 4, 2026

இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகளுக்கான தேர்தலில் நிஷாந்த ரணதுங்கவை வெல்ல விடாமல், இடைக்கால நிர்வாகத்தை 2015-இல் நியமித்து பாரியதொரு தவறைச்

gal

முச்சக்கர வண்டியிலிருந்து சடலம் மீட்பு

March 4, 2026

வெட்டுக்காயங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம், மொரட்டுவை காலி வீதிப் பகுதியில்

par

பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

March 4, 2026

பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது