பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்யுமாறு இலங்கை அரசிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த அவசர அறிக்கையை, மனித உரிமை ஆர்வலரும் அரச சித்திரவதைகளில் இருந்து உயிர்தப்பியவருமான ராய் சமதானம் வெளியிட்டுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள சிறைச்சாலை நெருக்கடி காரணமாக, மெகசின் சிறைச்சாலை, போகம்பரை சிறைச்சாலை மற்றும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை உள்ளிட்ட இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
நாட்டின் சிறைச்சாலைகள் சுமார் 10,000 கைதிகளை மட்டுமே தங்க வைக்கும் வசதியைக் கொண்டிருந்தாலும், தற்போது சுமார் 40,000 பேர் அடைக்கப்பட்டுள்ளதால் கடுமையான நெரிசல் நிலவுவதாகவும், அண்மையில் ஏற்பட்ட சிறைக் கலவரங்களில் பல கைதிகள் உயிரிழந்ததுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை மற்றும் 2000 ஆம் ஆண்டு பிந்துனுவெவ படுகொலை போன்ற சம்பவங்களை சுட்டிக்காட்டிய ராய் சமதானம், சிறைச்சாலைகளில் பதற்றமான சூழ்நிலை உருவாகும் போதெல்லாம் தமிழ் அரசியல் கைதிகள் அதிக ஆபத்தை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, தமிழ் அரசியல் கைதிகளுக்காக தனித்துவமான பாதுகாப்பு வளையங்களை அமைத்தல், கைதிகளின் குடும்பங்களுக்கு அவர்களின் பாதுகாப்பு நிலை குறித்த சரிபார்க்கப்பட்ட தகவல்களை உடனுக்குடன் வழங்குதல், ஐக்கிய நாடுகளின் சித்திரவதைத் தடுப்பு துணைக்குழு (SPT) மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) ஆகிய அமைப்புகளுக்கு தடையற்ற கண்காணிப்பு அனுமதி வழங்குதல் ஆகியவற்றை அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் நீண்டகாலமாக விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இந்த அவசர கோரிக்கை கனடா வெளியுறவு அமைச்சு உள்ளிட்ட முக்கிய சர்வதேச அமைப்புகளுக்கும் அதிகாரப்பூர்வமாக அனுப்பப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது