தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் வீட்டுக் காணியில் தமிழர் வரலாற்று மையம்; தடையுத்தரவு விண்ணப்பம் தாக்கல்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீடு அமைந்திருந்த காணியில் அமைய இருக்கும் தமிழர் வரலாற்று மையத்திற்கு எதிராக காங்கேசன்துறை பொலிஸாரினால் தடையுத்தரவு விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதன்போது விடயம் தொடர்பில் சில முக்கிய காரணிகளை சுட்டிக்காட்டிய நீதவான் இந்துஜா சிவலிங்கம், தடை உத்தரவு விண்ணப்பத்தை ஏற்க முடியாது என்றும், அரச தரப்பு சட்டத்தரணி ஊடாக விண்ணப்பிக்குமாறு கூறி எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஆலடி வீதி, வல்வெட்டித்துறையில் உள்ள வே.பிரபாகரனின் சகோதரி மதியாபரணம் ஜெயதீஸ்வரிக்கு சொந்தமான குறித்த காணியில் தமிழர் வரலாற்று மையம் அமைத்தற்கு முயற்சிகள் இடம்பெற்று வருகின்றது.

இது தொடர்பில் வல்வெட்டித்துறை நகரசபையில் அனுமதிகோரி விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையில் அனுமதி வழங்கப்படாது இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, குறித்த இடத்தில் பிரபாகரனுக்கு சிலை வைக்கப்போவதாக வதந்திகள் பரவி வந்த நிலையில், தெற்கிலங்கையில் உள்ள சில தரப்புகள் இவ்விடயத்தை விடுதலைப்புலிகளின் மீள் எழுச்சியாக உருவகப்படுத்தி வருகின்றனர். நாடாளுமன்ற அமர்வின் போதும் இந்த விடயம் பேசப்பட்டு உயர் கண்காணிப்பு நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த கட்டுமான விடத்திற்கு தடையுத்தரவு கோரி பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் காங்கேசன்துறை பொலிஸாரால் வெள்ளிக்கிழமை(20) இரகசியமான முறையில் விண்ணப்பம் செய்துள்ளனர்.

வடமராட்சியை சேர்ந்த இளம் சட்டத்தரணி ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்திருந்த நிலையில், அவரது இறுதிச்சடங்கிற்காக சென்றிருந்த நிலையில் குறித்த தினத்தில் நீதிமன்றத்தில் பெரும்பாலான சட்டத்தரணிகள் பிரசன்னமாகி இருக்கவில்லை.

இவ்வாறான நிலையில் காங்கேசன்துறை பொலிஸாரினால் குறித்த விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த காணியில் கட்டுமானத்தை மேற்கொள்வதற்காக காணி உரிமையாளரின் அற்றோணித்தத்துவம் (Power of Attorney) உரிமை பெற்றுள்ள ந. அனந்தராஜ், வல்வெட்டித்துறை நகரபிதா எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்களிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் அங்கு தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்புடைய கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட இருப்பதாக கூறி அதற்கு தடை உத்தரவு வழங்குமாறு காங்கேசன்துறை பொலிஸாரால் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது வரை குறித்த கட்டுமானத்திற்கு வல்வெட்டித்துறை நகரசபை உள்ளிட்ட தரப்பினரால் அனுமதி எவையும் வழங்கப்படாத நிலையில், எந்த அடிப்படையில் தடை உத்தரவு கோர முடியும் என ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை சுட்டிக்காட்டி தடை உத்தரவு விண்ணப்பத்தை ஏற்க முடியாது என்பதினை அறிவித்த நீதவான் இந்துஜா சிவலிங்கம் அரச தரப்பு சட்டத்தரணி ஊடாக விண்ணப்பிக்குமாறு கூறி எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

alise

இலங்கை அரசாங்கம் கோரினால் எரிபொருள் வழங்க தயார் – ஈரான்

March 23, 2026

இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில், நாட்டிற்குத் தேவையான எரிபொருள் மற்றும் கச்சா எண்ணெயை வழங்க ஈரான் தயாராக இருப்பதாக

Thri

நடிகை த்ரிஷா அரசியலில் இணையத் திட்டம்?

March 23, 2026

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான த்ரிஷா, கடந்த மூன்று மாதங்கள் எந்தப் படத்திலும் ஒப்புக் கொள்ளாததால், அவர் சினிமாவில் இருந்து

Sri-Lankan-Parliament-Complex

பாராளுமன்ற செயற்பாடுகள் குறித்த அறிவித்தல்

March 23, 2026

பாராளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் 7, 9 மற்றும் 10ஆம் திகதிகளில் கூடவிருப்பதாகப் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

tour

இம்மாதம் 18 நாள்களில் ஒரு இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

March 23, 2026

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், மார்ச் மாதத்தின் முதல் 18 நாள்களில்

gas

எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

March 23, 2026

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், புதிய எரிவாயு கையிருப்பு நாட்டிற்கு வந்தடைந்த நிலையில் மார்ச் இறுதி வரை

5

கச்சா எண்ணெய் விநியோகம் மீண்டும் குறைந்தது!

March 23, 2026

லகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நிறுவனமான சவுதி அரம்கோ (Saudi Aramco), ஏப்ரல் மாதத்திற்காக ஆசிய வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கச்சா

m

இறக்குமதி செய்யப்படும் பால்மா, கோதுமை மாவின் விலைகள் குறித்து அறிவிப்பு

March 23, 2026

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பால்மா மற்றும் கோதுமை மாவின் விலைகளை எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்போவதில்லை என இறக்குமதியாளர்கள் மற்றும் நிறுவனங்கள்

ar

ஊழல் குற்றச்சாட்டு; அர்ஜுன, தம்மிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை

March 23, 2026

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க

park

மறு அறிவிப்பு வரை நடைமுறைக்கு வந்த திட்டம்

March 23, 2026

கொழும்பு மாநகர சபையின் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (23) காலை 6:00 மணி முதல் வாகனத் தரிப்பிடக் கட்டண

ther

தெஹ்ரானில் அதிரடி தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்

March 23, 2026

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இன்று (23) அதிகாலையில் பாரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து

arre

நீண்டகாலமாக பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் புதுக்குடியிருப்பில் கைது

March 23, 2026

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நீண்டகாலமாக பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் உள்ளிட்ட 5 பேரை புதுக்குடியிருப்பு குற்றத்தடுப்பு

L_Hou

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் வீட்டுக் காணியில் தமிழர் வரலாற்று மையம்; தடையுத்தரவு விண்ணப்பம் தாக்கல்!

March 23, 2026

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீடு அமைந்திருந்த காணியில் அமைய இருக்கும் தமிழர் வரலாற்று மையத்திற்கு எதிராக காங்கேசன்துறை பொலிஸாரினால்