தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது வாக்குப் பதிவு

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப்​ப​திவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். பதற்​ற​மான வாக்​குச்​சாவடிகளில் கூடு​தல் பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 234 தொகு​திகளி​லும் ஒரே கட்டமாக இன்று நடைபெறுகிறது. 4,023 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 5.73 கோடி பேர் வாக்​களிக்க தகுதி பெற்​றுள்​ளனர். இவர்களில் 14.59 லட்​சம் பேர் முதல்​முறை வாக்​காளர்​கள்.

தமிழகம் முழு​வதும் 249 மாதிரி வாக்​குச்​சாவடிகள், 325 அனைத்து மகளிர் வாக்​குச்​சாவடிகள், 71 மாற்​றுத் திற​னாளி​கள் பணி​யாற்​றும் வாக்​குச்​சாவடிகள், 79 இளம் பணி​யாளர்​கள் பணி​யாற்​றும் வாக்​குச்​சாவடிகள் என மொத்​தம் 33,211 இடங்​களில் 75,064 வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

5,949 வாக்​குச்​சாவடிகள் பதற்​ற​மானவை என்று அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளன. இங்கு நுண்​பார்​வை​யாளர்​கள், துப்​பாக்​கிய ஏந்திய போலீ​ஸார் அல்​லது துணை ராணுவப் படை​யினர் நிறுத்தப்பட்​டுள்​ளனர்.

அனைத்து வாக்​குச்​சாவடிகளி​லும் குடிநீர், கழி​வறை, தடையற்ற மின்​சா​ரம், அவசர மருத்​து​வம், கைப்​பிடி​யுடன் கூடிய சாய்​வுதளம், மாற்​றுத் திற​னாளி​களுக்கு சக்கர நாற்​காலி, நிழற்​பந்​தல், வாக்காளர்​களுக்கு உதவ தன்​னார்​வலர்​கள் ஏற்​பாடு என அனைத்து வசதி​களும் செய்​யப்​பட்​டுள்​ளன.

வாக்​குச்​சாவடிக்​குள் செல்​போன் கொண்​டு​செல்ல அனு​மதி இல்லை என்​ப​தால், நுழைவு​வாயி​லில் செல்​போனை பாது​காப்​பாக வைக்​க​வும் முதல்​முறை​யாக வசதி செய்​யப்​பட்​டுள்​ளது.

இத்​தேர்​தலில் 1,06,408 வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள், தலா 75,064 கட்டுப்​பாட்டு இயந்​திரங்​கள் மற்​றும் விவி​பாட் இயந்​திரங்​கள் பயன்படுத்​தப்​படு​கின்​றன. கூடு​தலாக 20 சதவீத இயந்​திரங்​கள் தயார் நிலை​யில் உள்​ளன.

துணை ராணுவம் ரோந்து: பாது​காப்பு பணி​யில் துப்​பாக்கி ஏந்​திய 300 கம்​பெனி துணை ராணுவப் படை​யினர் ஈடு​பட்​டுள்​ளனர். இவர்கள் 24 மணி நேர​மும் தீவிர ரோந்​துப் பணி​யில் ஈடு​பட்டு வருகின்​றனர்.

மேலும் 83,875 காவல் துறை பணி​யாளர்​கள், 40,427 காவல் துறை அல்​லாத முன்​னாள் ராணுவத்​தினர் உள்​ளிட்ட பணி​யாளர்​களும் பாது​காப்பு பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர்.

வாக்​குச்​சாவடி பணி​யில் சுமார் 3.40 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட அரசு ஊழியர்​கள் ஈடு​பட்​டுள்​ளனர். தேர்​தல் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளவர்களில் நேற்று வரை 4.18 லட்​சம் பேர் தபால் வாக்​கு​களை பதிவு செய்​துள்​ளனர். வாக்​குச்​சாவடிகளுக்கு வாக்​குப்​ப​திவு இயந்திரங்​களை அனுப்​பும் பணி நேற்று காலை 11 மணி முதல் தொடங்​கியது.

அதனுடன் உரிய படிவங்​கள், சீல் வைக்க தேவை​யான அரக்​கு, மெழுகு​வத்​தி, அழி​யாத அடை​யாள மை உள்​ளிட்ட பொருட்​களும் அனுப்பி வைக்​கப்​பட்​டன. சென்னையில் தேர்தல் ​பணி​களை, 10 நாடு​களைச் சேர்ந்த 20 பிர​தி​நி​தி​கள் கொண்ட சர்​வ​தேசக் குழு​வினர் நேற்று பார்​வை​யிட்​டனர்.

வாக்​குப்​ப​திவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து வாக்​குச்​சாவடிகளின் உள்ளே மற்​றும் வெளியே தலா ஒரு கண்​காணிப்பு கேமரா என மொத்​தம் 1.50 லட்சம் கேம​ராக்​கள் பொருத்​தப்​பட்​டுள்​ளன.

தமிழகம் முழு​வதும் பதி​வாகும் கேமரா காட்​சிப் பதிவு​களை, சென்​னை​யில் உள்ள தலை​மைத் தேர்​தல் அதி​காரி அலு​வல​கத்​தில் இருந்து மாவட்ட வரு​வாய் அலு​வலர் நிலை​யில் உள்ள 18 அதிகாரி​கள் கொண்ட குழு​வினர் கண்​காணிப்​பார்​கள் என்று தலைமைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரி​வித்​தார்.

Screenshot 2025-07-30 100024

நாடெங்கும் நலமும் வீடெங்கும் வளமும் பெருகட்டும்: எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!

September 13, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தித் திருநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்குத் தனது உளங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

images - 2026-09-13T134857.284

“கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக கூட்டணிக்கு வருவார்கள்!” – அமைச்சர் ஷாஜகான் நம்பிக்கை

September 13, 2026

நாகர்கோவில்: கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வருவதாகவும், அவர்கள் வரக்கூடிய நாள்களில் அதிகாரப்பூர்வமாகத்

Tamil_News_lrg_432121120260912210533

லண்டன் கார் பந்தயம்: விபத்தைத் தாண்டி 3-வது இடத்தைப் பிடித்து நடிகர் அஜித் சாதனை!

September 13, 2026

லண்டன்: லண்டனில் முதலமைச்சர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்த புகழ்பெற்ற ‘லீ மான்ஸ் கப்’ (Le Mans Cup) கார்

images - 2026-09-13T133956.877

“வார்த்தைகளை அளந்து பேசுவது அரசியல்வாதிகளின் கடமை!” – அவதூறு பேச்சுகளுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி கண்டனம்

September 13, 2026

சென்னை: அரசியல் விமர்சனம் என்ற பெயரில் ஆபாசமாகப் பேசுவதும் மிரட்டல் விடுப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என அமைச்சர் ஜெகதீஸ்வரி தனது

36a6a19c6587d011b2834d714207e935

“லீடர்னா என்னன்னே தெரியாம பேசுறது ஏமாத்து வேலை!” – பிக்பாஸ் மேடையில் விஜய் சேதுபதி பேச்சு; முதலமைச்சருடன் ஒப்பிட்டுப் பரவும் சர்ச்சை!

September 13, 2026

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு (Leadership) குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி

26-6aa59dd45056b

லண்டன் கார் பந்தயத்தில் திடீர் என்ட்ரி கொடுத்த த்ரிஷா!

September 13, 2026

லண்டன்: இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று தொடங்கி

ba4598f0-5b62-11ee-8789-13750be9e58d.jpg

“நாவைக் காக்க வேண்டும்”: திமுகவினரின் அநாகரிகப் பேச்சுக்குத் திருக்குறள் வழியே கனிமொழி கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்திய நிலையில், அவர்களுக்கு அறிவுரை

1200-675-27101861-thumbnail-16x9-sdew

“ஆ.ராசா மற்றும் சேகர்பாபுவின் பேச்சுகள் திமுகவின் வன்மத்தைக் காட்டுகிறது” – அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்யைக் கண்டித்து திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டங்களில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா மற்றும் முன்னாள் அமைச்சர்

1200-675-26159036-thumbnail-16x9-ctr-nirmal-kumar-aspera (1)

“மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை; ஆவணங்கள் இல்லை” – அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்புப் பேட்டி!

September 13, 2026

துரை: அவசரநிலையின் போது மிசா சட்டத்தின் (MISA) கீழ் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்றும், வேறு காரணங்களுக்காகவே அவர்

b36f3954a794f9382daecd17359724952bb8ee0389728dfd9ea790750de3a7a2

“இல்லம் தேடி மதுவைக் கொண்டு வந்தவர் ஸ்டாலின்!” – ராமநாதபுரம் திமுக ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகி பேச்சால் சலசலப்பு

September 13, 2026

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மகளிர் அணி நிர்வாகி ஒருவர் நாக்கு

eft9J2c8vpDNB_Wg

தாராபுரம் இடைத்தேர்தல்: எனக்காக முதலமைச்சர் விஜய் பிரசாரம் செய்வார் – தவெக வேட்பாளர் சத்தியபாமா தகவல்!

September 13, 2026

தாராபுரம் / சென்னை: நடைபெறவுள்ள தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி ஏற்கனவே உறுதியாகிவிட்டது என்றும்,

768-512-25775621-thumbnail-16x9-madurai-malli

விநாயகர் சதுர்த்தி எதிரொலி: திண்டுக்கல் மார்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ. 1,500-க்கு விற்பனை!

September 13, 2026

திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் முகூர்த்த நாள்களை முன்னிட்டுத் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைப் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை