மலையகத்தில் தொடரும் வறட்சியான காலநிலையால் காடுகளுக்கு தீ வைக்கும் விஷமச் செயல் அதிகரித்துள்ளது.
இதன்படி அட்டன் மண்டலக் கல்வி அலுவலகத்திற்குப் பின்னால் உள்ள ஒரு தனியார் நிலத்தில் தீ விபத்து ஏற்பட்டு அந்த நிலத்தின் சுமார் 10 ஏக்கர் பகுதி அழிந்துள்ளது.
இன்று திங்கட்கிழமை (23) பிற்பகல் சுமார் 1:00 மணியளவில் ஏற்பட்ட தீ வேகமாகப் பரவிக் கொண்டிருந்த நிலையில், ஹாட்டன் காவல்துறை அதிகாரிகளும், அட்டன் டிக்கோயா நகரசபை ஊழியர்களும் பெரும் முயற்சியுயின் பின்னர் தீயைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.
குறித்த சம்பவம், விசமிகள் சிலரின் திட்டமிட்ட செயலாகும் இந்த நிலத்தில் வசிக்கும் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக தீ வைப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்
மேலும் குறித்த தீயினால் பகுதிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து மலையகத்தில் காலநிலை மாற்றம், கடுமையான வெப்பம், வறட்சி மற்றும் மனித நடவடிக்கைகளால் காட்டுத்தீ சம்பவங்கள் மற்றும் அதன் தீவிரம் கணிசமாக அதிகரித்துள்ளன. வறண்ட தாவரங்கள் எளிதில் தீப்பற்றுவதாலும், காற்று வீசுவதாலும் தீ வேகமாக பரவி, சுற்றுச்சூழல், வனவிலங்குகள் மற்றும் மனித குடியிருப்புகளுக்குப் பெரும் அழிவை ஏற்படுத்தி வருகிறது.