தேசிய மக்கள் சக்தியின் (NPP) கட்டுப்பாட்டில் உள்ள தங்காலை மாநகர சபையின் முதல் பட்ஜெட் தோற்றது.
வாக்கெடுப்பில் பட்ஜெட்டுக்கு ஆதரவாக ஒன்பது உறுப்பினர்களும்,எதிராக பத்து உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
சர்வ ஜன பல கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கவுன்சிலர் எதிர்க்கட்சியுடன் சேர்ந்து வாக்களித்து, அவர்களுக்கு பெரும்பான்மையை வழங்கியதை அடுத்து தோல்வி உறுதிசெய்யப்பட்டது.
இதற்கிடையில்,இதற்கு நேர்மாறாக, ஐக்கிய மக்கள் சக்தி (SJB) வெலிகம பிரதேச சபையின் முதல் பட்ஜெட்டை நிறைவேற்றியது. பட்ஜெட்டுக்கு ஆதரவாக 23 வாக்குகள் கிடைத்தன.