டொராண்டோ வளிமண்டல நிதியம் (Toronto Atmospheric Fund) 2024 ஆம் ஆண்டிற்கான GTHA கார்பன் உமிழ்வு கணக்கெடுப்பை வெளியிட்டுள்ளது. அதன் முடிவுகள் பிராம்டன் நகரம் மேலும் நிலைத்த எதிர்காலத்தை நோக்கி முன்னேற்றம் அடைந்து வருவதை வெளிப்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பீல் பிராந்தியம் (Peel Region) முழுவதும் உள்ள அனைத்து நகராட்சிகளும் இயற்கை எரிவாயு உமிழ்வுகளில் குறைப்பை பதிவு செய்துள்ளன. அவற்றில்,பிராம்டன் ஏழு சதவீதம் என்ற மிக அதிகமான குறைப்பை பதிவு செய்துள்ளது. நிலைத்த வளர்ச்சியை நோக்கி நகரம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதற்கான உதாரணங்களாக குளிரூட்டும் அமைப்புகளுடன் அமைக்கப்பட்ட Williams Parkway Operations Centre மற்றும் பசுமைக் கூரை, மழைநீர் சேகரிப்பு அமைப்பு, சூரியசூரிய ஒளியின் அளவுகளுக்கு ஏற்ப மாறுபடும் தன்மை ஜன்னல்கள் கொண்ட Springdale Library ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
மேலும், இந்த ஆண்டில் பிராம்டன் தனது பொது போக்குவரத்து அமைப்பில் கூடுதலாக 10 மின்சார பேருந்துகளை சேர்க்க திட்டமிட்டுள்ளது. இது கார்பன் உமிழ்வுகளை மேலும் குறைக்கும் முயற்சிக்கு ஆதரவாக இருக்கும் என பிராம்டன் நகராட்சி தெரிவித்துள்ளது.