இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் டெல்லியில் நடத்திய ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தியது சர்ச்சையாகி உள்ளது.
அதில், டெல்லியின் பெண் பத்திரிகையாளர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது.
தலிபான் பெண்களுக்காக இந்தியாவின் பெண் பத்திரிகையாளர்கள் அக்கூட்டத்தில் கேள்வி எழுப்பும் வாய்ப்பும் இல்லாமல் போய் உள்ளது. பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை விதித்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் பதிவாகின. இதே கருத்தை முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் தன் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
முக்கியமான இந்த சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் இல்லாதது தலிபான் ஆட்சியின் கீழ் பெண்களின் அவலநிலையை எடுத்துக் காட்டுவதாகவும் கருத்துகள் பதிவாகி உள்ளன.
Image – Meta AI