யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலகம்
ஜனாதிபதியின் சுற்றுச்சூழல் விருதுகள் - 2025 இன் சிறந்த அரச அலுவலகத்திற்காக தகுதிசார் விருதினைப் பெற்றுக்கொண்டுள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஜனாதிபதியின் சுற்றுச்சூழல் விருதுகள் - 2025க்கான விருது வழங்கும் விழா நடைபெற்றுள்ளது.
மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் தொடர்ச்சியாக கடந்த 11 ஆண்டுகளாக விருது வழங்கி வருகின்றது.
இந்நிலையில் இம்முறை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த சமூக வலைத்தளத்திற்கான ஜனாதிபதியின் சுற்றுச்சூழல் விருதுகள் – 2025 இன்சமூக ஊடக வகைப் பிரிவுக்கு – அகில இலங்கை ரீதியாக நல்லூர் பிரதேச செயலகத்தின் முகநூலுக்கு மட்டும்சிறப்பு ஜூரி விருது கிடைக்கப்பெற்றது.
நல்லூர் பிரதேச செயலகம் மட்டுமே தேசிய ரீதியில் ஒரே தடவையில் முதற்தடவையாக இரு விருதுகளையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.