ஜனாதிபதிக்கு நாமல் கடிதம்

நாட்டில் வர்த்தக சமூகம் மற்றும் சிறிய,நடுத்தர அளவிலான நிறுவனங்கள் வங்கி அமைப்பிலிருந்து நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினைகளுக்கு 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கொள்கை அடிப்படையில் தீர்வு முன்வைக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தற்போது வியாபாரம் செய்து வரும் நபர்களுக்கும் புதிய தொழில் முயற்சியாளர்களும் வியாபாரத்தை விரிவாக்குவதற்கு அல்லது புதிதாக ஆரம்பிப்பதற்கு வங்கி கடன் தேவைப்படுகிறது. எனினும், கடன் விண்ணப்பத்தின் போது கடன் தகவல் பணியகத்தின் அறிக்கையைப் பரிசீலிப்பதால், கடந்த காலத்தில் கடன் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொண்டு,பின்னர் அக்கடனை முழுமையாகச் செலுத்தி முடித்த நபர்களுக்கும் மீண்டும் கடன் பெறும்போது கடுமையான அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

கடன் தகவல் பணியகம் எவரையும் ‘கருப்புப் பட்டியலில்’ சேர்ப்பதில்லை என்றபோதிலும்,செலுத்தி முடிக்கப்பட்ட கடன்கள் தொடர்பான கடந்தகால தகவல்கள் 5 ஆண்டுகள் வரை அறிக்கையில் இருப்பதால்,அது தற்போதைய கடன் பெறும் திறனைப் பாதிக்கிறது. இதற்குப் பிற நாடுகளிலிருந்தும் முன்னுதாரணங்களைப் பெற முடியும்.

மலேசியாவின் மத்திய கடன் தகவல் அமைப்பில் கடனை அடைத்து முடித்தவுடன் அந்நிலைமை உடனடியாகப் புதுப்பிக்கப்படுவதுடன்,பிரதானமாக கடந்த 12 மாத கால கடன் திருப்பிச் செலுத்தும் தன்மையே காணப்படுகிறது. எனவே, 2027 வரவு செலவுத் திட்டத்தின் மூலம், கடன் முழுமையாக அடைக்கப்பட்ட பிறகு 5 வேலை நாட்களுக்குள் கடன் தகவல் பணியகத்தின் அறிக்கையைப் புதுப்பித்தல். செலுத்தி முடிக்கப்பட்ட கடனை ‘முழுமையாக அடைக்கப்பட்டது’ எனத் தெளிவாகக் குறிப்பிடுதல். பழைய கடன் சிக்கலை மட்டும் கருத்திற் கொள்ளாமல், தற்போதைய வருமானம் மற்றும் கடன் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றின் அடிப்படையிலும் கடனை மதிப்பிடுமாறு வங்கிகளுக்கு வழிகாட்டல்களை வழங்குதல்.

இலங்கையின் கடன் தகவல் அறிக்கையில் கடந்தகாலத் தகவல்களைத் தக்கவைத்துக் கொள்ளும் காலப்பகுதியை சர்வதேச முன்னுதாரணங்களைக் கருத்திற் கொண்டு 2027 ஆம் ஆண்டிற்குள் மறுபரிசீலனை செய்தல். அனைத்துக் கடன் பொறுப்புகளையும் செலுத்தி முடித்துள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கு மீண்டும் வியாபாரத்தை ஆரம்பிக்க ‘இரண்டாம் வாய்ப்பு கடன் திட்டத்தை’ அறிமுகப்படுத்துதல் வேண்டும் ஆகிய குறிப்பிட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Shiranthi-Rajapaksa 1

சிராந்திக்கு பிணை

October 16, 2026

சிரிலிய சவிய வங்கி கணக்கு தொடர்பான விசாரணைகளுக்காக கைதுசெய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்பெண்மணி சிராந்தி ராஜபக்சவிற்கு கொழும்பு நீதவான்

6

“மின்சாரம் வாங்குவதில் முறைகேடு; முதலமைச்சருக்கு எத்தனை கோடி சென்றுள்ளது?” – ஆர்.எஸ்.பாரதி கேள்வி!

October 16, 2026

சென்னை: ஒரு யூனிட் 20 ரூபாய்க்கு வாங்கிய மின்சாரத்தை தற்போது 35 ரூபாய்க்கு வாங்குவதில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு எத்தனை கோடி

5

“2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பதக்கப் பட்டியலில் முதல் 10 நாடுகளுக்குள் இந்தியா இடம்பெற வேண்டும்” – ஆதவ் அர்ஜூனா!

October 16, 2026

சென்னை: இரண்டாயிரத்து முப்பத்து ஆறாம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கப் பட்டியலில் முதல் பத்து நாடுகளுக்குள் இந்தியா கட்டாயம்

4

“தமிழக அரசியலில் புயலை கிளப்பிய ஆராய்ச்சி மாணவர் பாரதிதாசன் – திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு!”

October 16, 2026

சென்னை: அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ் மலேசியாவில் உள்ள ஒரு பிரபல பல்கலைக்கழகத்தில் மருத்துவ ஆராய்ச்சி படிப்பை

3 - Copy (2)

“செமிகண்டெக்டர் உற்பத்தி: தமிழ்நாடு குறைக்கடத்தி சூழலமைப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!”

October 16, 2026

சென்னை: தமிழ்நாட்டில் குறைக்கடத்தி (Semiconductor) முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில், தமிழ்நாடு குறைக்கடத்தி சூழலமைப்புத் திட்டத்தை, மாநில முதலமைச்சர் ஜோசப்

2

“மூடர் கூட்டத்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தே தீரும்!” – மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!

October 16, 2026

சென்னை: முந்தைய திமுக அரசால் கட்டமைக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் கோவையில் இன்று மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படுவதை முன்னிட்டு, முன்னாள் முதலமைச்சர்

97959573

“தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும்” – உணவுத்துறை அறிவிப்பு!

October 16, 2026

சென்னை: தமிழகத்தில் வருகிற 18-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும் என்று உணவுத்துறை அறிவித்துள்ளது. ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி

nmam

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

October 16, 2026

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள குழந்தை நலப் பிரிவு கட்டிடத்தொகுதி மற்றும்

namal raja

ஜனாதிபதிக்கு நாமல் கடிதம்

October 16, 2026

நாட்டில் வர்த்தக சமூகம் மற்றும் சிறிய,நடுத்தர அளவிலான நிறுவனங்கள் வங்கி அமைப்பிலிருந்து நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினைகளுக்கு

peru

பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பில் கவனம்

October 16, 2026

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கூட்டம் அதன் தலைவர் பெருந்தோட்ட மற்றும்

a

ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

October 16, 2026

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, டில்லியில் தரை இறங்க வேண்டிய ஏர் இந்தியா விமானம் ஒன்று ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. ஜேர்மனியின் பிராங்பர்ட்

Olivia-Chow-3-1536x783

இளைஞர்களுக்கு 15,000 வேலைவாய்ப்புகள்: ஸ்கார்பரோ கிழக்கு LRT திட்டம் குறித்து ஒலிவியா சௌவின் வாக்குறுதியும், பிரெட் பிராட்போர்ட்டின் விமர்சனமும்

October 16, 2026

முக்கிய குறிப்புகள் டொராண்டோ மேயர் தேர்தலை முன்னிட்டு மீண்டும் போட்டியிடும் ஒலிவியா சௌ (Olivia Chow), ஸ்கார்பரோ கிழக்கு எல்.ஆர்.டி