ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவிற்கு தனுஷ் வருகை ?

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவிற்கு தனுஷ் வருகை தர இருக்கிறாராம். அதைப்போல பராசக்தி விழாவிற்கு வருகை தரப்போகும் சிறப்பு விருந்தினர் யார் என்பது குறித்தும் பேச்சுக்கள் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது

விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய செய்திகள் தான் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. விஜய்யின் கடைசி படத்தின் இசை வெளியீட்டு விழா தமிழகத்தில் இல்லாமல் மலேசியாவில் தான் நடைபெற இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

டிசம்பர் 27 இவ்விழா மலேசியாவில் மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளதாம். இதற்கான வேலைகள் பரபரப்பாக போய்க்கொண்டு இருக்க தற்போது ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளப்போவது யார் ? என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்தியாவில் சாலை முடியும் இடம் எது தெரியுமா? ராமாயணத்தில் குறிப்பிடப்பட்ட அதிசயம்!
தற்போது கிடைத்த தகவலின்படி பலரும் தனுஷ் இவ்விழாவில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக சொல்கின்றனர். ஹெச்.வினோத்தின் அடுத்த பட ஹீரோ தனுஷ் தான். எனவே அதன் அடிப்படையில் தனுஷ் இவ்விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பிருப்பதாக சொல்கின்றனர். ஆனால் இது உண்மையான தகவலா ? இல்லையா ? என்பது தெரியவில்லை.

இந்த தகவல் ஒருபக்கம் இருக்க மறுபக்கம் ஜனநாயகன்படத்தோடு பொங்கலுக்கு வெளியாகப்போகும் பராசக்தி இசை வெளியீட்டு விழா பற்றியும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற இருப்பதாக தெரிகின்றது. ஜனவரி முதல் வாரத்தில் பராசக்தி இசை வெளியீட்டு விழா நடைபெறுமாம்.

இந்நிலையில் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவிற்கு தனுஷ் சிறப்பு விருந்தினராக வந்தால் பராசக்தி விழாவிற்கு யார் சிறப்பு விருந்தினராக வருவார் ? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. பராசக்தி திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் வாங்கி வெளியிடுகின்றது. படத்தை அவர்கள் தான் ப்ரோமோஷனும் செய்வார்கள் என தெரிகின்றது.

கமல்ஹாசன்ரெட் ஜெயண்ட் நிறுவனத்துடன் நெருக்கமாக இருப்பதால் அவர் பராசக்தி விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருவாரா ? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ஆனால் இதெல்லாம் வெறும் யுகங்கள் தானே தவிர உண்மையான தகவலாக தெரியவில்லை. படக்குழுவோ படம் தொடர்புடையவர்களோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை இத்தகவல்கள் உறுதியான தகவல்களா ? என்பது தெரியாது.

இந்நிலையில் பராசக்தி மற்றும் ஜனநாயகன் ஆகிய திரைப்படங்கள் வெளியாக இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் டைம் இருக்கின்றது. அதற்குள் கோலிவுட் வட்டத்தில் இவ்விரு படங்கள் தொடர்பாக பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. சோஷியல் மீடியாவில் ஜனநாயகன் vs பராசக்தி மோதல்கள் தான் போய்க்கொண்டு இருக்கின்றது.

அதுவும் இது விஜய்யின் கடைசி படம் என்பதாலும், பராசக்தி திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறார்கள் என்பதாலும் இதை அரசியல் ரீதியாகவும் சிலர் பார்க்கின்றனர். எது எப்படியோ நாளுக்கு நாள் ஜனநாயகன் vs பராசக்திபடங்களை பற்றிய பேச்சுக்கள் பரபரப்பாக போய்க்கொண்டு இருக்கின்றது. கண்டிப்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படங்களுக்கு இடையே பலத்த போட்டி நிலவும் என்றே தெரிகின்றது.

Annalingam Annarasa

2026 ஆம் ஆண்டுக்கான ஊர்காவற்துறை பிரதேச சபையின் பாதீடு மீண்டும் தோல்வி!

December 8, 2025

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது. இருந்தும் உள்ளூராட்சி மன்ற சட்டங்களில் இருக்கும்

jail1

வாளுடன் வட்டுக்கோட்டையில் கைது செய்யப்பட்டவருக்கு விளக்கமறியல்

December 8, 2025

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலி கோவில் பகுதியில் வாளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

1688202098-EARTHQUAKE-6

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

December 8, 2025

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.வடக்கு ஜப்பானின் ஹோன்சு தீவில் உள்ளது அமோரி

chand

அணையா விளக்கு நினைவுத் தூபி சேதம்; அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

December 8, 2025

செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு நினைவுத் தூபி சேதப்படுத்தப்பட்ட நடவடிக்கை குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர்

Judment

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் போலி சட்டத்தரணி?

December 8, 2025

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் செயற்பட்டு கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணியை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு

old

யாழ்.பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்குக்கான போராட்டம்

December 8, 2025

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு வேண்டுமெனக் கோரி போராட்டமொன்று இன்றையதினம் திங்கட்கிழமை (08) முன்னெடுக்கப்பட்டது. விளையாட்டு மற்றும்

chinm

ஒரு படத்தில் பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு விளைவிக்கிறார் சின்மயி!

December 8, 2025

ஒரு படத்தில் பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு செய்வது போல் நடந்து கொண்ட பாடகி சின்மயி, அதற்காக மன்னிப்பு

chira

சிரஞ்சீவி – நயன்தாரா இணைவு

December 8, 2025

நடிகர் சிரஞ்சீவி நடிகை நயன்தாரா நடித்துள்ள புதிய படத்தில் இருந்து சசிரேகா எனும் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது. நடிகர் சிரஞ்சீவியின்

chami_1

பெண் விமானியின் கோரிக்கை; தந்தை வழித்தன்மையை உறுதிப்படுத்த கிரிக்கெட் வீரர் மறுப்பு

December 8, 2025

தனது குழந்தையின் தந்தைவழித்தன்மையை உறுதிப்படுத்த டி.என்.ஏ அறிக்கையைப் பெற நீதிமன்ற உத்தரவைக் கோரிய பெண் விமானியின் கோரிக்கைக்கு கிரிக்கெட் வீரர்

nori

பிரித்தானியாவின் நொரிஸ் முதற் தடவையாக சம்பியனானார்

December 8, 2025

முதற் தடவையாக மக்லரன் அணியின் லான்டோ நொரிஸ் போர்மியுலா வண் சம்பியனானார். ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற அபு தாபி குரான்

sel

செல்டா விகோவிடம் தோற்ற றியல் மட்ரிட்

December 8, 2025

ஸ்பானிய லா லிகா தொடரில், தமது மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற செல்டா விகோவுடனான போட்டியில் 0-2 என்ற

chi

மனித நுகர்வுக்கு பொருந்தாத 12,000 கிலோகிராம் இறைச்சிக்கு சீல்

December 8, 2025

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கால்நடை பண்ணையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 12,000 கிலோகிராம் இறைச்சி, மனித நுகர்வுக்கு ஏற்றதல்ல