ஆங்கிலக் கால்வாயில் உள்ள தீவுகளை தளமாகக் கொண்ட ப்ளூ ஐலண்ட்ஸ் ஏர்லைன்ஸ், அதன் செயல்பாடுகளை நிறுத்தியதாக அறிவித்துள்ளது.
இதன்படி, குறித்த நிறுவனத்தின் கீழ் இயங்கும் அனைத்து விமானங்களும் உடனடியாக இரத்து செய்யப்படுகின்றன.
20 ஆண்டுகளாக பிரித்தானிய தீவுகளுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள இடங்களுக்குச் செயல்பட்டு வரும் விமான நிறுவனம், 14ஆம் திகதி முதல் வர்த்தகத்தை நிறுத்தியதாக உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அனைத்து முன்பதிவுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கூறியுள்ளார்.
இதன் காரணமாக பிற விமான நிறுவனங்கள் குறித்த சேவையினை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.