கோதுமை மா மற்றும் சீனியைப் பயன்படுத்தி செயற்கையாகத் தேன் தயாரித்த ஒருவரை புல்மோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரிடமிருந்து செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட தேன் அடங்கிய 30 லீற்றர் கொள்ளளவு கொண்ட 25 பீப்பாய்களையும், 100 லீற்றர் கொள்ளளவு கொண்ட 2 பீப்பாய்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸார் வீட்டிற்குச் சென்ற சமயத்திலும் அவர் வீட்டில் தேன் தயாரித்துக்கொண்டிருந்துள்ளார்.
சீனி, கோதுமை மா மற்றும் ஏனைய இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி இத்தேன் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இவை கொழும்பு மற்றும் கம்பஹா பிரதேசங்களில் உள்ள ஆயுர்வேத மருந்தகங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.