செம்மணி இனப்படுகொலைக்கு நீதி கோரி BEHIND ME MEDIA நடாத்திய போராட்டத்தில் கனேடிய தமிழ் அரசியல்வாதிகளில் நீதன் ஷானை ஒருவரைத் தவிர ஏனைய கனேடிய தமிழ் அரசியல்வாதிகள் ஏன் இணைய மறுத்தார்கள்? அவர்கள் செம்மணி இனப்படுகொலைக்கு ஆதரவா? என வாக்களித்து கனேடிய பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்த மக்கள் கேள்வியெழுப்பியுள்ளார்கள்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான நேற்று ஆகஸ்ட் 30 ஆம் திகதி
BEHIND ME MEDIA மற்றும் BEHIND ME FOUNDATION ஆகிய நிறுவனங்களின் ஏற்பாட்டில் ‘செம்மணி எழுச்சி – அணையா தீபம்’ ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு பெருந்திரளான மக்களின் ஆதரவுடன் கனடா ALBERT CAMPBELL SQUARE இல் நடைபெற்றது.
காணாமற் போன எம் உறவுகள் குறித்த உண்மைகள் வெளிவரவேண்டும் என்ற எம்மினத்தின் ஆறாத வலிகள், தேடல்கள், காத்திருப்புக்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மௌனித்த வார்த்தைகள்… என எல்லாவற்றுக்கும் சர்வதேச நீதிமன்றத்தின் ஊடாகப் பதிலைப் பெறுவதற்கு நேற்றுக் கூடிய நிகழ்வில் உங்களுக்காகக் குரல் கொடுக்க எங்களைத் தலைவராக்குங்கள் என வாக்குறுதிகளை வழங்கி -தமிழ் மக்களுக்காக கனேடிய அரசியல் அரங்கத்துக்குள் சென்ற தமிழ்த் தலைமைகள் எங்கே என்ற கேள்வி Behind Me Mediaவின் நிறுவனரும் தலைவருமான கணா செல்வா ஏற்புரை வழங்கிக் கொண்டிருக்கும் போது பொது மக்களால் கேட்கப்பட்டது.
இதே அவலங்கள் எமக்கு வரக் கூடாதென்று தானே நாட்டை விட்டு ஓடி வந்தோம். இந்த அவலங்களைக் காட்டித்தானே புலத்தில் குடியுரிமைகளை கண்ணீர் விட்டுப் பெற்றுக் கொண்டோம். அந்த நன்றியை கனேடிய தமிழ் அரசியல் பிரமுகர்கள் எப்படி மறக்கலாம்?
ஒரு சில அமைப்புகளைத் தவிர ஏனைய கனேடிய தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களை பல்வேறு விதமாக வழிகளில் அழைக்கப்பட்டும் சமூகமளிக்கவில்லை என்பது தற்போது கனேடிய மண்ணில் மாத்திரமன்றி உலகளாவிய ரீதியில் பேசுபெருளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய ரீதியிலான ஆதரவுக் குரல்களோடு நடைபெற்ற மேற்படி விழித்தெழு தமிழா! நிகழ்வில் செம்மணி மனிதப் புதைகுழிப் பேரவலமே எம்மினத்தின் மீது சிங்களப் பேரினவாத அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலைக்கான சாட்சியாக உள்ளதை கனேடிய தமிழ் அரசியல் தலைமைகள் மறந்தது எப்படி என்ற கேள்விக்கான பதிலைக் கொடுக்க வேண்டியது நிகழ்வில் சமூகமளிக்கத் தவறிய ஒவ்வொருவரதும் கடமை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
செம்மணியில் கடந்த ஆகஸ்ட் 19ஆம் திகதி வரை மீட்கப்பட்ட கைக் குழந்தைகள் உட்பட்ட சகல வயதுகளையும் சேர்ந்த 583 மனித எலும்புக் கூடுகளுக்குமாக அரை மணி நேரத்தைக் கூட ஒதுக்க முடியத கையாலாகாத மனிதர்களாக நாம் ஏன் வாழ வேண்டும் என்ற கேள்விகளுக்கு பதிலை யார் வழங்குவார்கள்? போன்ற வலி மிகுந்த கேள்விகளை எமது ஊடக அலுவலகத்திற்கு வரும் அழைப்புக்கள் பெருமளவில் தாங்கி வந்து கொண்டிருப்பதை இங்கே பதிவுசெய்ய விரும்புகின்றோம்.