இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட 13,698 வணிகங்கள் குறித்த தரவுகள் தொழில்துறை பேரிடர் ஆதரவு மையம் அறிவித்துள்ளது.
இதன்படி நுண் அளவிலான வணிகங்கள்- 5,639, அளவிலான வணிகங்கள்-4,636, நடுத்தர அளவிலான வணிகங்கள்- 2,986 பெரிய அளவிலான வணிகங்கள் 437 என்பன பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் பாதிப்படைந்த தொழில்துறைகளின் சேதங்களை முறையிட 071 266 6660 என்ற தொலைபேசி எண்ணை தொழில் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
அத்துடன், பாதிக்கப்பட்ட வணிகங்கள் தொடர்பான தகவல்களை விரைவில் வழங்குமாறு தொழிலதிபர்களை வலியுறுத்தியுள்ளது.
அதன்படி, அனைத்து தகவல்களும், 2025 டிசம்பர் 16 ஆம் திகதியன்று பிற்பகல் 2:00 மணிக்கு முன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேலும், இந்த செயல்முறைக்குத் தேவையான உதவிகளை சம்பந்தப்பட்ட பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் மாவட்ட செயலக அலுவலகங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி மேம்பாட்டு அமைச்சின் அதிகாரிகளிடமிருந்து பெறலாம் என்றும் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.