சீன அரசாங்கம் வழங்கிய 1900 கடற்றொழில் வலைகளை மன்னாரில் பயன்படுத்தக் கோரிக்கை

சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 1900 கடற்றொழில் வலைகளை மன்னார் மாவட்டத்தில் பயன்படுத்துவதற்கு சீன அரசாங்கத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்திற்கு ஜனாதிபதி நேரடியாக விஜயம் செய்து மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தை அவசரமாக கூட்டி இருந்தார். வடக்கு மாகாணத்தில் மன்னார் மாவட்டம் மிகவும் மோசமான நிலையில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டிருந்தது.

இடர் ஏற்பட்ட காலத்திலிருந்து மீனவர்களுடைய பிரதான கோரிக்கையாக, தங்களுக்கு வாழ்வாதாரம் வழங்கப்படவில்லை. தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு மிகவும் துன்பியலுக்கு உட்பட்டதாக அவர்களுடைய முறைப்பாடு இருந்தது.

இந்த கோரிக்கையை நான் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தி இருந்தேன். கடந்த பத்து நாட்களுக்கு மேலாக மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் இருக்கின்றார்கள்.

அவர்களுக்கு உணவு தட்டுப்பாடு கூட இருக்கிறது எனத் தெரியப்படுத்தி இருந்தேன். ஜனாதிபதி மன்னார் மாவட்டத்தில் இருக்கின்ற கிட்டத்தட்ட 12000 மேற்பட்ட மீனவர்களுக்கு உடனடியாக இரண்டு வாரங்களுக்குரிய நிவாரணங்களை வழங்குவதாகவும் அதேபோல் வடக்கு மாகாண மீனவர்களுக்கும் இந்த நிவாரணம் வழங்கப்பட இருக்கின்றது.

அத்துடன் சேதமடைந்த படகுகளை திருத்துவதற்கும் ஏனைய கடற்றொழில் உபகரணங்களை திருத்துவதற்கும் உரிய நிதியினை விடுவிப்பதாக கூறப்பட்டது. அது மட்டுமல்லாமல் சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 1900 கடற்றொழில் வலைகளை மன்னார் மாவட்டத்தில் பயன்படுத்துவதற்கு சீன அரசாங்கத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

இதுக்கும் மேலாக பாடசாலை மாணவர்களுடைய தரவுகள் சேகரிப்பதில் சில மந்தநிலை காணப்பட்டது. அது தொடர்பாக ஜனாதிபதி கடுமையான உத்தரவை அதிகாரிகளுக்கு வழங்கினார்.

வருகின்ற 31 ஆம் திகதிக்குள் பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் தலா 15000 ரூபாய் ஆரம்ப கொடுப்பனவாக கொடுத்து அவர்களுடைய கற்றல் உபகரணங்கள், பாடசாலை பைகள், சப்பாத்துக்கள், சீருடை போன்றவற்றை உடனடியாக கொள்வனவு செய்வதற்கு வழங்குமாறு கூறியிருக்கின்றார். விசேடமாக பாதைகள் முழுமையாக மோசமான நிலையை அடைந்திருக்கின்றது.

kethe

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தினூடாக 1.3 மில்லியன் பெறுமதியான நிவாரணம்

December 16, 2025

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தினூடாக 1.3 மில்லியன் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாந்தை

cens

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.4% வளர்ச்சி!

December 16, 2025

2025 ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 5.4

hath

மீண்டும் ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டுக்கு எதிராக வழக்கு

December 16, 2025

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க, ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராக மீண்டும் வழக்குத்

na

நாட்டில் இயல்பு நிலைமையை மீள ஏற்படுத்தத் தேசிய அனர்த்த முகாமைத்துவ கூட்டுப் பொறிமுறை

December 16, 2025

தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நேற்று (15) மீண்டும் கூடியது. ‘டித்வா’ புயலினால்

spr

மூடப்பட்ட ஸ்பிரிங்வெளி வைத்தியசாலை

December 16, 2025

மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை ஸ்பிரிங்வெளி பிரதேச வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக ஊவா மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த

Education

640 பாடசாலைகள் இன்று இயங்காது

December 16, 2025

ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள 640 பாடசாலைகள் இன்று (16) திறக்கப்படாது என கல்வி அமைச்சின் செயலாளர்

ma

புன்னைச்சோலையில் நிவாரணம் வழங்கவும் கிராம உத்தியோகத்தரை இடமாற்றவும் கோரிப் போராட்டம்!

December 16, 2025

மட்டக்களப்பு, புன்னைச்சோலை கிராம சேவகர் பிரிவில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரியும், கிராம உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யக்கோரியும் பொதுமக்கள்

war

தொடர்ந்தும் மண் சரிவு எச்சரிக்கை

December 16, 2025

கண்டி மாவட்டத்தில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிப்பவர்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) சிவப்பு மண்சரிவு

World ba

உலக வங்கியால் இலங்கைக்கு நிதி ஒதுக்கீடு!

December 16, 2025

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, உலக வங்கி, பல மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. நடைமுறை திட்டங்களிலிருந்து நிதியை மறுபயன்பாடு செய்வதன்

Nagamu_1

இலங்கைக்கு தென்கிழக்காக புதிய காற்றுச் சுழற்சி – சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா

December 16, 2025

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இது தற்போது உகந்தையில் இருந்து 408 கி.மீ.

vudl

அசோக்க ரன்வலவின் வைத்திய அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை?

December 16, 2025

சபுகஸ்கந்த பகுதியில் கவனயீனமாக வாகனத்தைச் செலுத்தி 6 மாதப் பச்சிளம் குழந்தை உட்பட 3 பேரைக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில்

Prabath

சேதமடைந்த புகையிரத வீதிகளைப் புனரமைப்பதற்கு 400 மில்லியன்

December 16, 2025

மண்சரிவு மற்றும் வெள்ளம் என்பவற்றால் சேதமடைந்த புகையிரத வீதிகளை புனரமைப்பதற்கு 400 மில்லியன் டொலர் செலவாகக் கூடும் என அத்தியாவசிய