இலங்கை கடற்படையினர், நேற்றுமுன்தினம் சிலாபம் கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் ஆயிரத்து எழுநூற்று நாற்பது (1740) கிலோகிராம் பீடி இலைகளைக் கடற்படையினர் கைப்பற்றினர்.
அதன்படி, மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் ரங்கலவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்றுமுன்தினம் மாலை சிலாபம் கடல் பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, குறிப்பிட்ட கடல் பகுதியில் கைவிடப்பட்ட ஐம்பத்தைந்து (55) பைகள் பரிசோதிக்கப்பட்டன. இதன் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஆயிரத்து எழுநூற்று நாற்பது (1740) பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுகத்தில் உள்ள சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
By C.G.Prashanthan