இந்தியாவின் ஜார்கண்ட மாநிலத்தின் ராஞ்சிக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இந்தியா செல்கிறார்.
குறித்த மாநிலத்தில் இன்று 17ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ள எரிசக்தி மாற்ற தயார் நிலைக்குறியீடு நிகழ்வில் பங்கேற்பதற்காக அவர் அங்கு செல்கிறார்.
குறித்த விஜயத்தின்போது அங்கு அரசியல், சமூக தலைவர்களையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.