யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி நியமிக்கப்பட்டுள்ளார்.
உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக செயற்பட்டு வரும் அவர், எதிர்வரும் 25.03.2026தொடக்கம் துணைவேந்தர் ஆக நியமனம் பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் இடம்பெற்ற துணைவேந்தருக்கான தேர்தலில் அதிக புள்ளிகளை பெற்று முதன்மை நிலையை பேராசிரியர் வேல்நம்பி பெற்றிருந்தார்.
அத்துடன், துணைவேந்தர் தேர்தலில் கடந்த மூன்று தடவைகள் முதல் மூன்று ஸ்தானங்களுள் தெரிவாகி இருந்தார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.