தென் கொரியாவின் தலைநகர் சியோலின் புறநகர்ப் பகுதியில் உள்ள குடிசைப்பகுதியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் பல வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சியோலின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள குரியோங் (Guryong) என்ற குடியிருப்புப் பகுதியில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக வெள்ளிக்கிழமை (16) சுமார் 300 தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுப்பட்டனர். இதுவரை உயிரிழப்பு அல்லது காயங்கள் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீ விபத்து ஏற்பட்ட சுமார் ஆறு மணி நேரத்திற்குப் பிறகே தீயை கட்டுக்குள் கொண்டுவந்ததாக அந்நாட்டு தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கைகளில் 1,200-க்கும் மேற்பட்டோர் தீயணைப்பு வீரர்கள் பொலிஸார் ஈடுப்பட்டதுடன் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணைகளும் நடைபெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மலைச்சரிவில் அமைந்துள்ள இந்த குடியிருப்புப் பகுதி, அதிக எரிபொருள் தாங்கிகள் அமைக்கப்பட்டுள்ளதால், கடந்த காலங்களில் பலமுறை தீ விபத்துக்கள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.