சர்வதேச விவகாரங்களில் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படச் சீனா தயார்!

சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் (NPC) நிரந்தரக் குழுவின் உப தலைவர் வெங் டொங்மின் (Wang Dongming) மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கிடையில் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று புதன்கிழமை (17) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நீண்டகால இருதரப்பு உறவுகள் மற்றும் எதிர்காலத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டிய துறைகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை அண்மையில் எதிர்கொண்ட இயற்கை அனர்த்தத்தின் போது சீன அரசாங்கம் வழங்கிய துரித உதவிகளுக்காகப் பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்ததோடு, அனர்த்தத்தின் பின்னர் இலங்கை தற்போது இயல்பு நிலைக்குத் திரும்புதல் மற்றும் மீளக்கட்டியெழுப்பும் கட்டத்திற்குள் பிரவேசித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்ட வெங் டொங்மின், எதிர்வரும் மறுசீரமைப்புப் பணிகளுக்கும் சீனாவின் முழுமையான ஆதரவு வழங்கப்படும் என உறுதியளித்தார்.

பிரதமரின் அண்மைய சீன விஜயத்தின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் இச்சந்திப்பின்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, பாடசாலை சீருடை, உர மானியம், டிஜிட்டல் கல்விச் செயற்பாடுகளுக்கான தொழில்நுட்ப உதவி, வீதி அபிவிருத்தி, சுகாதாரம் மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் அத்துறைகளில் நட்புறவை மேலும் பலப்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது.

பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படச் சீனா தயாராக இருப்பதாகத் தெரிவித்த வெங், இந்நாட்டின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காகத் தொடர்ச்சியாகப் பங்களிப்பு செய்வதாக உறுதி அளித்தார்.

பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வின் அடிப்படையில் இந்த உறவை மேலும் பலப்படுத்துவதற்கு இரு தரப்பினரும் இதன்போது இணக்கம் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் சீனத் தூதுவர் ஷி ஷென்ஹொங் (Qi Zhenhong), பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் பிரதமர் அலுவலகத்தினதும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினதும் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

By C.G.Prashanthan

jana

உத்தியோகப்பூர்வ இல்லங்களில் இருந்து வெளியேற வேண்டுமென்ற சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு

December 18, 2025

பொலிஸாருக்கு வழங்கப்பட்டிருக்கும் உத்தியோகப்பூர்வ இல்லங்களில் இருந்து வெளியேறுமாறு பொலிஸ் மா அதிபரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு

lan

யாழ்.மாநகரசபை காணியை அபகரித்தவர் அகப்பட்டார்!

December 18, 2025

யாழ்.மாநகரசபைக்கு சொந்தமான காணியை தனிநபர் ஒருவர் தனதாக்கிக் கொண்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, குறித்த பகுதிக்கு இன்றையதினம்(18.12.2025)மாநகரசபை முதல்வர் மதிவதனி

sana

இலங்கையின் வளர்ச்சிக்கு சர்வதேச சுற்றுலாப்பயணிகள் உதவ வேண்டும் – சங்கக்கார

December 18, 2025

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் வளர்ச்சிக்கு சர்வதேச சுற்றுலாப்பயணிகள் உதவ வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார

metr

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

December 18, 2025

அடுத்து வரும் 36 மணி நேரத்தில் கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அடுத்த

elon

முதலிடத்தில் எலான் மஸ்க்!

December 18, 2025

600 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்துமதிப்பை தாண்டிய முதல் நபர் என்ற சாதனையை டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான்

bri

‘உலகளாவிய கிளர்ச்சி’ முழக்கத்தை எழுப்புபவர்களுக்கு பிரித்தானியா எச்சரிக்கை

December 18, 2025

பிரித்தானியாவின் லண்டன் மற்றும் கிரேட்டர் மான்செஸ்டர் நகர பொலிஸார், ‘இன்டிபாடா’ (Intifada – உலகளாவிய கிளர்ச்சி) என்ற முழக்கத்தை எழுப்புபவர்கள்

navee

சிட்னி தாக்குதல் பயங்கரவாதி கோமாவில் இருந்து மீண்டார்!

December 18, 2025

ஆஸ்திரேலியாவில், ‘ஹனுக்கா’ நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதி கோமாவில் இருந்து மீண்ட நிலையில், அவர் மீது கொலை உள்ளிட்ட 59

in ru

ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்தியாவுக்கு கோரிக்கை

December 18, 2025

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா தவறான பாதையில் செல்வதை இந்தியா எடுத்துச் சொல்ல வேண்டும் எஸ்தோனியா கோரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யா –

put

ஐரோப்பாவை கடுமையாக எச்சரிக்கும் புடின்

December 18, 2025

உக்ரைன் விவகாரத்தில் எவ்வித விட்டுக் கொடுப்புக்களுக்கும் தயாரில்லை எனவும் நிலங்களை பலவந்தமாக கைப்பற்ற தயங்கப் போவதில்லை எனவும் ரஷ்ய ஜனாதிபதி

sim

சிம்பு -ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணி?

December 18, 2025

சிலம்பரசன் தற்சமயம் தனது 49 ஆவது திரைப்படமான அரசன் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். தற்போது

pac

திரைப்பட விருதிற்கான நடுவர் குழு தெரிவு

December 18, 2025

திரைப்படத் துறையில் பணியாற்றும் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு அவர்களின் கடின உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் பல்வேறு தனியார் அமைப்புகள்

raja

நடிகர் பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப்’

December 18, 2025

நட்சத்திர நடிகரான பிரபாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘தி ராஜா சாப்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சஹானா சஹானா’ எனும்