சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பைக் குறைக்க நடவடிக்கை

அனர்த்தத்தினால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பைக் குறைக்க தயாரான IMF
நாடு முழுவதும் உயிர்களைப் பலிகொண்டு, ஆயிரக்கணக்கானோரை இடம்பெயரச் செய்த அழிவுகரமான புயல் மற்றும் வெள்ள நிலைமையினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பைக் குறைப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) தயாராக உள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே IMF இன் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கோசேக் இதனைத் தெரிவித்தார்.

அனர்த்தத்தின் மனிதாபிமான, சமூக மற்றும் பொருளாதார தாக்கங்களை மதிப்பிடுவதற்கு இலங்கை அதிகாரிகள், அபிவிருத்தி பங்காளிகள் மற்றும் ஏனைய சகாக்களுடன் நெருக்கமாக செயற்படுவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

“புயலினால் இலங்கையின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் மனித உயிரிழப்புகளுக்கு மேலதிகமாக பொருளாதார நடவடிக்கைகளிலும் இது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என அவர் அங்கு குறிப்பிட்டார்.

இலங்கை தற்போது அதன் பங்காளிகளுடன் இணைந்து உடனடி அனர்த்தத்திற்குப் பிந்திய சேத மதிப்பீட்டை மேற்கொண்டு வருகிறது.

இந்த மதிப்பீடு நிறைவடைந்த பின்னர் பொருளாதார தாக்கங்கள் குறித்த தெளிவு கிடைக்கும் என அவர் கூறுகிறார்.

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் விஸ்தரிக்கப்பட்ட நிதி வசதி (EFF) தொடர்பில் உறுதிப்படுத்திய கோசேக், நாட்டின் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்க IMF அர்ப்பணிப்புடன் உள்ளதாகத் தெரிவித்தார்.

“EFF ஒப்பந்தத்தின் கீழ் இலங்கையின் மீட்சி, மறுசீரமைப்பு மற்றும் தாங்கும் திறன் ஆகியவற்றுக்கு நாங்கள் தொடர்ச்சியாக ஆதரவளிப்போம்” எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

புலயலுக்கு முன்னதாக கடந்த ஒக்டோபர் மாதம் ஐந்தாவது மீளாய்வு தொடர்பில் இலங்கை அதிகாரிகளும் IMF பணியாளர்களும் ஏற்கனவே பணியாளர் மட்ட இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக அவர் வலியுறுத்தினார்.

அத்துடன் “மீட்புச் செயல்பாட்டில் இலங்கைக்கு மேலும் உதவுவதற்கான மாற்றீடுகளை IMF பணியாளர்கள் தற்போது ஆராய்ந்து வருவதாகவும்”, டிசம்பர் 15 ஆம் திகதி IMF பணிப்பாளர் சபை கூட்டத்தை நடத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

பொருளாதாரத் தேவைகள் மற்றும் சேதங்கள் குறித்த மேலதிக தகவல்கள் எம்மிடம் உள்ளதால், அத்தகவல்கள் இலங்கைக்கு மேலும் உதவக்கூடிய விதம் குறித்து எடுக்கப்படும் இறுதித் தீர்மானங்களுக்கு காரணமாக அமையலாம் எனவும் ஜூலி கோசேக் மேலும் தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கும், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் மக்களுக்கும் அவர் தனது அனுதாபத்தைத் தெரிவித்தார்.

po

உதவித் தொகையை அதிகரித்த பிரித்தானியா

December 6, 2025

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, வழங்கும் மனிதாபிமான உதவித் தொகையை ஒரு மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகள்

veh

வாகன பாவனை தொடர்பில் எச்சரிக்கை

December 6, 2025

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கிய அல்லது அடித்துச் செல்லப்பட்ட வாகனங்களை முழு ஆய்வு இல்லாமல் பயன்படுத்த வேண்டாம் என

thera

ஜனாதிபதி – தேரர் சந்திப்பு!

December 6, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று சனிக்கிழமை (06) முற்பகல் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்து, மல்வத்து மகாநாட்டில், அதி

pra

நிவாரணக் கொடுப்பனவில் எந்தவித ஊழலுக்கும் இடமில்லை

December 6, 2025

வெள்ள நிவாரணக் கொடுப்பனவில் எந்தவித ஊழலுக்கும் இடமில்லை வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்குகின்ற 25,000 ரூபா கொடுப்பனவில்

dssdvds

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ‘எக்ஸ்’ சமூக ஊடக நிறுவனத்துக்கு அபராதம்

December 6, 2025

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான, ‘எக்ஸ்’ சமூக ஊடக நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்குமுறை ஆணையம், 1,259 கோடி

pa hi

இந்து மத மாணவியர் பாகிஸ்தான் அரச பள்ளியில் கட்டாய மத மாற்றம்?

December 6, 2025

பாகிஸ்தானில், அரசு பள்ளியில் படிக்கும் இந்து மாணவியர், வலுக்கட்டாயமாக முஸ்லிம் மதத்துக்கு மத மாற்றம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நம்

sa

சிங்கப்பூர் பள்ளிகளில் ‘ஸ்மார்ட் போன், வாட்ச்’ பயன்படுத்த கட்டுப்பாடு?

December 6, 2025

சிங்கப்பூரில், பள்ளி நேரங்களில், ‘ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச்’ பயன்படுத்த மாணவர் களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. சமூக வலைதளங்களில்

hea

வரலாறு காணாத வகையில் வெளிநாட்டவர் பிரிட்டனிலிருந்து வெளியேற்றம்!

December 6, 2025

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் தங்கியிருந்த வெளிநாட்டினர், வரலாறு காணாத வகையில் வெளியேறி வருகின்றனர். அதில், இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர். வேலைக்காகவும்,

fr

பிரான்சில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வுக்குள் புகுந்த காரால் 10 பேர் பலி

December 6, 2025

பாரிஸ்: பிரான்சில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட கூட்டத்திற்குள் அதிவேகமாக கார் புகுந்ததில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

dol

‘FIFA சமாதான விருது’டொனால்ட் டிரம்பிற்கு…

December 6, 2025

டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான விருது’ வழங்கப்பட்டது சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான

mod

இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது!

December 6, 2025

இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான கொள்கையை பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு பின்பற்றி வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்

vija

உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது

December 6, 2025

உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது என முன்னாள் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச