சர்வதேச நாணய நிதியத்தின் 5வது கடனைப் பெறுவதில் நெருக்கடியை

சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாவது கடன் தவணையை பெறுவதில் அரசாங்கம் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது. அரசாங்கம் முன்வைத்த வெள்ள நிவாரணத்திற்கான சுமார் 70 பில்லியன் ரூபா ஒதுக்கீட்டை சர்வதேச நாணய நிதியம் அங்கீகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக குழு கூட்டம் எதிர்வரும் 15ம் திகதி திங்கட்கிழமை வாஷிங்டனில் நடைபெறவுள்ளது.

இலங்கைக்கு ஐந்தாவது கடன் தொகையை விடுவிப்பது குறித்து இறுதி முடிவு இதன்போதே எடுக்கப்பட உள்ளது.

வெள்ள நிவாரணத்திற்காக சுமார் 70 பில்லியனை விடுவிப்பது தொடர்பாக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. எனினும், உடனடியாக வெள்ளப் பேரழிவுக்கு வரிப் பணத்தைப் பயன்படுத்துவது பொருளாதாரத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், அது பொருளாதார நெருக்கடியை மேலும் ஆபத்தான சூழ்நிலைக்கு இட்டுச் செல்லக்கூடும் என்றும் நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால், சேதம் குறித்த குறிப்பிட்ட மதிப்பீடுகள் செய்யப்பட்டு, பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை, 70 பில்லியன் ரூபா நிவாரண திட்டத்தை ஜனவரி மாதம் வரை ஒத்திவைக்குமாறு சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது.

இதேவேளையில், இலங்கையின் திடீர் பேரழிவைச் சமாளிக்க ஒரு சிறப்பு நிதியை வழங்க சர்வதேச நாணய நிதியம் தயாராக இருப்பதாக நாணய நிதிய அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இலங்கையை ஆதரிக்கும் சர்வதேச நாடுகளை அழைத்து ஆதரவு மாநாட்டைக் கூட்டுவதற்கு அரசாங்கம் முன்முயற்சி எடுக்கலாம் என்றும் ஆலோசனை வழங்கினர். இதனூடாக சேதமடைந்த பாலங்கள், வீதிகள் மற்றும் வீடுகளை மீண்டும் கட்டியெழுப்பத் தேவையான நிதியை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர்கள் அரசாங்கத்திடம் தெரிவித்தனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையைப் பொருட்படுத்தாமல், அரசாங்கம் மக்களுக்கு 70 பில்லியன் ரூபாவை ஒதுக்க முடிவு செய்தால், அது இரு தரப்புக்கும் இடையே கருத்து மோதலை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதனால், 15 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் ஐந்தாவது கடன் தவணையை நாணய நிதியம் ஒத்திவைக்கக் கூடும். இந்தக் குழப்பமான சூழலில், கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவுக்கும் இடையே ஒரு சிறப்பு தொலைபேசி உரையாடல் நடைபெற்றது. எனினும், நிதி விடுவிப்பு தொடர்பாக எந்த ஒரு இறுதியான உடன்பாடும் இதன் போது எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

dup

பதில் பிரதம நீதியரசராக யசந்த கோதாகொட

December 8, 2025

பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான யசந்த கோதாகொட, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில்

Man on the chair in Handcuffs. Rear view and Closeup ,Men criminal in handcuffs arrested for crimes. With hands in back,boy  prison shackle in the jail violence concept.

ஆடை மாற்றிப் பார்க்கும் அறையில் கேமரா; உரிமையாளர் கைது

December 8, 2025

ஆடை மாற்றிப் பார்க்கும் (ஃபிட்டோன்) அறையில் கேமரா ஒன்றை மறைத்து வைத்து, பெண்கள் ஆடை மாற்றுவதை காணொளியாகப் பதிவு செய்த

Annalingam Annarasa

2026 ஆம் ஆண்டுக்கான ஊர்காவற்துறை பிரதேச சபையின் பாதீடு மீண்டும் தோல்வி!

December 8, 2025

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது. இருந்தும் உள்ளூராட்சி மன்ற சட்டங்களில் இருக்கும்

jail1

வாளுடன் வட்டுக்கோட்டையில் கைது செய்யப்பட்டவருக்கு விளக்கமறியல்

December 8, 2025

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலி கோவில் பகுதியில் வாளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

1688202098-EARTHQUAKE-6

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

December 8, 2025

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.வடக்கு ஜப்பானின் ஹோன்சு தீவில் உள்ளது அமோரி

chand

அணையா விளக்கு நினைவுத் தூபி சேதம்; அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

December 8, 2025

செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு நினைவுத் தூபி சேதப்படுத்தப்பட்ட நடவடிக்கை குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர்

Judment

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் போலி சட்டத்தரணி?

December 8, 2025

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் செயற்பட்டு கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணியை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு

old

யாழ்.பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்குக்கான போராட்டம்

December 8, 2025

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு வேண்டுமெனக் கோரி போராட்டமொன்று இன்றையதினம் திங்கட்கிழமை (08) முன்னெடுக்கப்பட்டது. விளையாட்டு மற்றும்

chinm

ஒரு படத்தில் பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு விளைவிக்கிறார் சின்மயி!

December 8, 2025

ஒரு படத்தில் பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு செய்வது போல் நடந்து கொண்ட பாடகி சின்மயி, அதற்காக மன்னிப்பு

chira

சிரஞ்சீவி – நயன்தாரா இணைவு

December 8, 2025

நடிகர் சிரஞ்சீவி நடிகை நயன்தாரா நடித்துள்ள புதிய படத்தில் இருந்து சசிரேகா எனும் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது. நடிகர் சிரஞ்சீவியின்

chami_1

பெண் விமானியின் கோரிக்கை; தந்தை வழித்தன்மையை உறுதிப்படுத்த கிரிக்கெட் வீரர் மறுப்பு

December 8, 2025

தனது குழந்தையின் தந்தைவழித்தன்மையை உறுதிப்படுத்த டி.என்.ஏ அறிக்கையைப் பெற நீதிமன்ற உத்தரவைக் கோரிய பெண் விமானியின் கோரிக்கைக்கு கிரிக்கெட் வீரர்

nori

பிரித்தானியாவின் நொரிஸ் முதற் தடவையாக சம்பியனானார்

December 8, 2025

முதற் தடவையாக மக்லரன் அணியின் லான்டோ நொரிஸ் போர்மியுலா வண் சம்பியனானார். ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற அபு தாபி குரான்