சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று மீண்டும் நாட்டிற்கு வருகை?

இலங்கைக்கு வழங்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஐந்தாவது மீளாய்வுக்காக, பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான கலந்துரையாடல்களை மீண்டும் ஆரம்பிக்க, கூடிய விரைவில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று மீண்டும் நாட்டிற்கு வருகை தரத் திட்டமிட்டுள்ளதாக இலங்கையிலுள்ள IMF தூதுக்குழுவின் தலைவர் எவன் பாபஜோர்ஜியோ தெரிவித்தார்.

‘டித்வா’ புயலுக்குப் பின்னரும் IMF வேலைத்திட்டம் வலுவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில், நெருக்கடி உச்சத்தில் இருந்த சந்தர்ப்பத்திலிருந்து இதுவரையில் வளர்ச்சிக்காகக் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் குறிப்பிட்டார்.

“நிதியியல் துறையின் வருமானத்தை பலமாகச் சேகரித்தல், சமூகச் சீர்திருத்தங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு வலைகளைப் பலப்படுத்துதல் என்பன வேலைத்திட்டத்தின் முதல் தூணாகும்.

இரண்டாவது தூண் கடன் நிலைத்தன்மையை நிறுவுதல், நிதி ஸ்திரத்தன்மையைப் பேணுதல் மற்றும் கடன் மறுசீரமைப்பதாகும். விலை ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது அதன் மூன்றாவது தூணாகும்; இதில் வெளிநாட்டு கையிருப்பு உள்ளிட்ட வெளிப்புறத் தேவைகளைப் பலப்படுத்துவதும் உள்ளடங்கும்.

நான்காவது நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதாகும். இறுதியாக நிர்வாகத்தை மேம்படுத்துதல் மற்றும் ஊழலைக் குறைத்தல் ஆகியவை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதுவரை இந்த இலக்குகளுக்காக எட்டப்பட்டுள்ள முன்னேற்றம் உண்மையில் சிறப்பானது. இது குறித்துப் பல துறைகளில் நாம் திருப்தியடைய முடியும். நெருக்கடி உச்சத்தில் இருந்த சந்தர்ப்பத்திலிருந்து இதுவரையில் வளர்ச்சிக்காகக் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடையப்பட்டுள்ளது. வளர்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் மீட்சியடைந்துள்ளதால், கடந்த ஆண்டில் 5% வளர்ச்சியை எட்டியுள்ளது. மொத்தத் தேசிய உற்பத்தியின் (GDP) முன்னேற்றமாக வரி வருமானம், நெருக்கடி நிலவிய காலத்தில் 7.3% ஆக இருந்தபோதிலும், இன்று அது 14.8% வரை அதிகரித்துள்ளது.

இதன் மூலம் இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை மக்கள் மேற்கொண்ட முன்னேற்றம் பிரதிபலிக்கிறது.

வருமானத்திற்குள் உள்நாட்டு உற்பத்தியையும் ஒரு பகுதியாக அதிகரிப்பது நிதி ஸ்திரத்தன்மைக்கான அடித்தளத்தை அமைக்கிறது.

விலைகளைக் கருத்திற்கொள்ளும் போது, இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் நான் முதலாவது ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போது பணவீக்கம் 70% என்ற உயர் மட்டத்தில் காணப்பட்டது.

இன்று அது 2% மற்றும் 3% இற்கு இடையில் காணப்படுவதுடன், மத்திய வங்கியின் இலக்கான 5% மட்டத்தில் ஸ்திரமடையும்.”

இதேவேளை, ‘டித்வா’ புயலுக்குப் பின்னரும் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டங்கள் மிக வலுவாகச் செயற்படுத்தப்பட்டு வருவதாக இலங்கையிலுள்ள IMF தூதுக்குழுவின் தலைவர் எவன் பாபஜோர்ஜியோ கூறினார்.

“இன்னும் ஒரு வாரத்தில் நாம் மீண்டும் இலங்கைக்கு வருகிறோம். வேலைத்திட்டத்தின் அடுத்த கட்டத்தில் ‘டித்வா’ புயலின் தாக்கம் அதில் எவ்வகையில் பிரதிபலிக்க வேண்டும் என்பது குறித்துக் கலந்துரையாட நாம் எதிர்பார்த்துள்ளோம் சீனிவாசன் கூறியது போன்று வேலைத்திட்டத்தின் அடிப்படை நோக்கங்கள் அவ்வாறே உள்ளன. ஏனெனில் கடந்த வருடம் நவம்பர் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் வீசிய புயலுக்குப் பின்னரும் வேலைத்திட்டம் வலுவாகச் செயற்படுத்தப்பட்டு வருகிறது எனக் கூறமுடியும்.”

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

pla

நிறுத்தப்பட்டிருந்த மத்திய கிழக்கு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, நேற்று

ai

ஆந்திர மாநிலத்தில் AI வழங்கிய போலி தீர்ப்புகள்?

March 4, 2026

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சொத்துத் தகராறு வழக்கு ஒன்று விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்தச் சொத்தை ஆய்வு செய்ய

d

மோசடி வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் சுற்றிவளைப்பு

March 4, 2026

ஜப்பான் மொழிக் கற்கை நிலையமொன்றை நடத்துவதாகக் கூறி, ஜப்பானின் கட்டுமானத் துறை, ஹோட்டல் துறை மற்றும் சாரதிப் பணிகளுக்காக ஆட்களை

kottaga

8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் போராட்டம்

March 4, 2026

யுலிபீல்ட் தோட்டத் தொகுதிக்குட்பட்ட யதன்பிரிவு தோட்ட மக்கள், 08 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கொட்டகலை – நுவரெலியா பிரதான வீதியின்

zelen

மத்திய கிழக்குப் போர்; ஏவுகணைகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் – உக்ரைன் ஜனாதிபதி

March 4, 2026

மத்திய கிழக்கு போர் காரணமாக உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகளைக் கண்டறிவது கடினமாகலாம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.