சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சர்வதேச மட்டத்தில் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளார்.
இதன்படி, சர்வதேச பாராளுமன்ற ஒன்றியம் (IPU), பொதுநலவாய பாராளுமன்ற சங்கம் (CPA) மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஆகியோரிடம் அவர் எழுத்துமூலமான முறைப்பாடுகளைச் சமர்ப்பித்துள்ளார்.
கடந்த செப்டெம்பர் 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் தாம் முன்வைக்க முயன்ற சிறப்புரிமைப் பிரச்சினையை எழுப்புவதற்கு சபாநாயகர் சந்தர்ப்பம் வழங்கவில்லை என்றும், அதற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்து இந்த முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.