கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து டிப்பர் வாகனங்கள் மற்றும் உழவு இயந்திரங்கள் ஐந்து சட்டவிரோதமான மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கிளிநொச்சி பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளிநொச்சி பன்னங்கண்டி முரசு மோட்டை கண்டவளை பெரியபரந்தன் ஆகிய பகுதிகளில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.