சட்டவிரோத கடற்தொழிலை சஜித் ஆதரிப்பது தனது அரசியல் இருப்புக்காகவே!

அநுர அரசாங்கத்தினால் சட்டவிரோத கரைவலை நிறுத்தப்பட்டமைக்கு எதிராக போராடுபவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இணைந்து குரல் கொடுப்பது அவரது அரசியல் இருப்பை தக்கவைக்க எடுக்கும் முயற்சியாகும் என வடமாகாண கடற் தொழிலாளர் இணையத்தின் உறுப்பினர் அன்னலிங்கம் அன்னராசா குற்றச்சாட்டை முன்வைத்தார்.

குறித்த விடயம் தொடர்பாக இன்று (10) அவரை தொடர்புகொண்டு வினவும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய அரசாங்கம் சட்டவிரோத கரைவலையை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தமையை வரவேற்பதோடு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவின் செயற்பாட்டுக்கு எனது கண்டனத்தையும் தெரிவிக்கிறேன்.

கடந்த வாரம் சட்டவிரோத கரைவலையை நிறுத்தியமைக்கு எதிராக ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

குறித்த போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற சஜித் பிரேமதாச முறையற்ற சட்டவிரோதமான தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொண்டமையை வடபகுதியை மீனவர்கள் சார்பில் கண்டிக்கின்றோம்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடபகுதி கடலில் இடம்பெறும் சட்ட விரோத மீன்பிடி முறைகளை நடத்த வேண்டும் என வடபகுதி மீனவர்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

2023 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வருகை தந்த சஜித் பிரேமதாசவிடம் பாரம்பரிய மீனவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இடம்பெறும் சட்ட விரோத மீன்பிடி முறைகளை தடை செய்ய வேண்டும் அதனை பாராளுமன்றத்தில் நீங்கள் பேச வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தோம்.

ஆனால் சஜித் பிரேமதாச கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்துக்கு முன் இடம் பெற்ற சட்டவிரோத மீன்பிடியை தடை செய்தமைக்கு ஆதரவாக கலந்து கொண்டமை அவரின் பங்கு ரோத்து அரசியலை எடுத்துக்காட்டுகிறது.

இலங்கையில் மாறி மாறி வந்த அரசாங்கங்களிடம் வடபகுதி மீனவர்கள் தொடர்ச்சியாக சட்டவிரோத மீன்பிடி முறைகளை நிறுத்துமாறு பல்வேறு சந்தர்பங்களில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு முறையை மட்டும் தடை செய்திருக்கிறார்கள்.

ஆனால் இது போதாது கடலில் சட்டவிரோத அனைத்து மீன்பிடி முறைகளும் நிறுத்தப்பட வேண்டும் என்பதே எமது மீனவர்களை எதிர்பார்ப்பும் கோரிக்கையாகவும் உள்ளது.

ஆகவே தனது அரசியல் இருப்புக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சட்ட விரோத மீன்பிடி முறைகளை ஊக்குவிக்கும் போராட்டங்களில் கலந்து கொள்வதை நிறுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

pla

நிறுத்தப்பட்டிருந்த மத்திய கிழக்கு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, நேற்று

ai

ஆந்திர மாநிலத்தில் AI வழங்கிய போலி தீர்ப்புகள்?

March 4, 2026

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சொத்துத் தகராறு வழக்கு ஒன்று விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்தச் சொத்தை ஆய்வு செய்ய

d

மோசடி வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் சுற்றிவளைப்பு

March 4, 2026

ஜப்பான் மொழிக் கற்கை நிலையமொன்றை நடத்துவதாகக் கூறி, ஜப்பானின் கட்டுமானத் துறை, ஹோட்டல் துறை மற்றும் சாரதிப் பணிகளுக்காக ஆட்களை

kottaga

8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் போராட்டம்

March 4, 2026

யுலிபீல்ட் தோட்டத் தொகுதிக்குட்பட்ட யதன்பிரிவு தோட்ட மக்கள், 08 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கொட்டகலை – நுவரெலியா பிரதான வீதியின்

zelen

மத்திய கிழக்குப் போர்; ஏவுகணைகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் – உக்ரைன் ஜனாதிபதி

March 4, 2026

மத்திய கிழக்கு போர் காரணமாக உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகளைக் கண்டறிவது கடினமாகலாம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

Vasantha Athukorala

ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு – பேராசிரியர் வசந்த அத்துகோரள

March 4, 2026

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின்

Nalin

ஊடக வல்லுநர் நிறுவனச் சட்ட வரைவு உருவாக்கம் – சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

March 4, 2026

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை கொடுப்பனவுகளை விரைவாகச் செலுத்துமாறு , அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் அனைத்து ஊடக

Sl E

சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறே எந்தவொரு சட்டமும் இலங்கையில் அமையவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

March 4, 2026

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய சட்ட முன்மொழிவின் தயாரிப்புப்பணிகளை உன்னிப்பாக அவதானித்துவருகிறோம். எனினும் புதிதாக உருவாக்கப்படும் எந்தவொரு