சட்டத்தரணிகள் மற்றும் வைத்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள ஆவணங்களை (பாஸ் ஸ்டிக்கர்களை) அகற்றுவது தொடர்பாக அரசினால் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லையென சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாகவே சுகாதார அமைச்சர் மேற்படி பதிலை வழங்கியுள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ஜெயதிஸ்ஸ, மோட்டார் போக்குவரத்து மற்றும் பொலிஸ் உட்பட எந்தப் பிரிவினராலும் ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் வைத்தியர்களை அடையாளம் காணவும் மருத்துவமனைகளுக்கு எளிதாகச் செல்லவும் வாகன பாஸ்கள் வழங்கப்படுகின்றன என்று அவர் மேலும் கூறினார்.
அத்துடன் “அரசாங்கம் அத்தகைய எந்த அடையாள ஆவணத்தையும் நீக்க யோசிக்கவில்லை” என்று அவர் மேலும் கூறினார்.