இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று இந்தோனேசியா. இங்கு அடிக்கடி நில நடுக்கங்கள் ஏற்படுவது வாடிக்கை.
இந் நிலையில் இன்று அங்குள்ள மலுகு தீவுகளில் அமைந்துள்ள பாண்டா கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.6 ஆக பதிவானது.