2025 ஆம் ஆண்டு வரவு -செலவுத்திட்டத்தின் மூலம் புகையிரதப் போக்குவரத்து நவீனமயப்படுத்தலின் கீழ் வினைத்திறனான புகையிரத சேவைகளை வழங்குதல் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக தற்போது இயங்கி வருகின்ற களனிவெளி புகையிரதப்பாதையை அவிசாவளையிலிருந்து மேலும் படிப்படியாக நீடிப்பதற்கு முன்மொழியப்பட்டு, அதற்குரிய அடிப்படை வேலைகளை ஆரம்பிப்பதற்கு 250 மில்லியன் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
களனிவெளி (கொழும்பு கோட்டை தொடக்கம் அவிசாவளை வரைக்குமான) புகையிரதப்பாதையை இரத்தினபுரி வரைக்கும் நீடிப்பதற்கான சாத்தியவளக் கற்கையை மேற்கொள்ளல் மற்றும் விரிவான திட்டத்தைத் தயாரித்தலுக்கு அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் காணப்பட்ட புகையிரதப் பாதைக்கு அண்டியதாகவே குறித்த புகையிரதப் பாதையை மீண்டும் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளதுடன், அதற்காக சாத்தியவளக் கற்கையொன்றை மேற்கொள்ளல் மற்றும் விரிவான திட்டம் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
குறித்த பணிகளுக்கு ஆலோசனை சேவை வழங்கும் நிறுவனமொன்றைத் தெரிவு செய்வதற்காக குறித்த பெறுகைச் செயன்முறையை அமுல்படுத்துவதற்காக பதில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.