கொக்கட்டிச்சோலை – நெல்லிக்காடு கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் : இதுவரை ஐவர் கைது!

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளுவினாமடு, நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து பெண்ணொருவர் உயிருடன் மீட்கப்பட்டதோடு, அதே கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னதாக மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில்,நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைதாகியுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொக்கட்டிச்சோலை பொலிஸாரும் கிழக்கு மாகாண குற்றத்தடுப்புப் பிரிவினரும் இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பின்னணி

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளுவினாமடு, நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் பெண் ஒருவர் உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்டதோடு, அன்றைய தினம் அதே கிணற்றில் மற்றுமொரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட பெண், சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அதனையடுத்து, ஆரம்பகட்ட விசாரணையின் பின்னர், இச்சம்பவத்தில் கடத்தல், கொள்ளை மற்றும் மனிதப் படுகொலை ஆகியவற்றுடன் தொடர்புடைய இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் என 3 சந்தேக நபர்கள் கிழக்கு மாகாண குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

குறித்த சந்தேக நபர்கள் 22 மற்றும் 34 வயதுடைய நாவற்காடு மற்றும் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், பெண் சந்தேக நபர் காஞ்சனகுடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபர்கள் குறித்த இரு பெண்களையும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வீதியில் சென்றுகொண்டிருந்தபோது முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்றுள்ளனர். வழியில் அவர்களுக்கு போதைப்பொருள் கலந்த பானத்தை அருந்தக் கொடுத்துள்ளனர்.

அவர்கள் மயக்கமடைந்ததும், அவர்களிடம் இருந்த தங்க நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு அவர்களை நீர் நிறைந்த குறித்த கிணற்றுக்குள் தள்ளியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட பெண் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர்.

இவர் கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி வெல்லாவெளி பகுதியிலிருந்து களுவாஞ்சிக்குடி பளுவாமம் அரச வைத்தியசாலை மற்றும் வங்கிக்குச் சென்று மீண்டும் திரும்பிக்கொண்டிருந்தபோது, சந்தேக நபர்கள் இவரை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்று மேற்கூறியவாறு போதைப்பொருள் கலந்த பானத்தைக் கொடுத்து நகைகளைக் கொள்ளையடித்து கிணற்றுக்குள் தள்ளியுள்ளனர்.

கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண், கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை தனது மூன்று வயது குழந்தையுடன் வவுணதீவு பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் செல்வதற்காகப் பேருந்திற்குக் காத்திருந்தபோது, கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரும் அவரது மனைவியும் முச்சக்கரவண்டியில் வந்து தாங்களும் மட்டக்களப்பு செல்வதாகக் கூறி அவர்களை ஏற்றியுள்ளனர்.

குறித்த பெண் தனது தேவைகளை முடித்துவிட்டு மட்டக்களப்பு நகரிலிருந்து திரும்பும்போது சந்தேக நபர்கள் அவர்களைப் பின்தொடர்ந்து மீண்டும் முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

செல்லும் வழியில் போதைப்பொருள் கலந்த பானத்தை குழந்தையுடன் சென்ற பெண்ணுக்கு கொடுத்துள்ளனர். அவர் மயக்கமடைந்த பிறகு நகைகளைக் கொள்ளையிட்டு அவரை கிணற்றுக்குள் தள்ளியுள்ளனர்.

இந்நிலையில் அவரது குழந்தை வவுணதீவு பாலக்காடு பகுதியில் உள்ள வயல்வெளியில் கைவிடப்பட்ட நிலையில் பின்னர் மீட்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் முதலில் 3 பேர் கைது செய்யப்பட்டதையடுத்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை மேலும் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளைத் தம்வசம் வைத்திருந்தமை மற்றும் அவற்றை விற்பனை செய்தமை தொடர்பில் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 39 மற்றும் 49 வயதுடைய இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, கொள்ளையிடப்பட்ட தங்க நகைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கொக்கட்டிச்சோலை பொலிஸார் மற்றும் கிழக்கு மாகாண குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

pac

அவுஸ்திரேலிய நிறுவனம் வெளியிட்டுள்ள உலகளாவிய பயங்கரவாத பட்டியலில் முதலிடத்தில் பாகிஸ்தான்!

March 23, 2026

அவுஸ்திரேலிய நிறுவனம் வெளியிட்டுள்ள “உலகளாவிய பயங்கரவாதக் குறியீடு” பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தைப் பெற்றுள்ளது. சிட்னியில் இயங்கும் சர்வதேச பொருளாதாரம் மற்றும்

kad

பாலகமுனை கடற்பரப்பில் கடல் அட்டைகளுடன் மூவர் கைது

March 23, 2026

மன்னார், பாலகமுனை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை

au

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்- ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சந்திப்பு

March 23, 2026

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்திக்கும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெதிவ் டக்வொர்த்திற்கும் (Matthew Duckworth) இடையிலான சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை

ea

கிழக்குப் பல்கலையின் கலை கலாசார பீட புதிய பீடாதிபதியாக பேராசிரியர் சுரேஸ்!

March 23, 2026

ழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் புதிய பீடாதிபதியாக பேராசிரியர் க. சுரேஸ் திங்கட்கிழமை (23) அன்று நடந்த பீடாதிபதி

Gemunu wi

வழமைக்கு திரும்புகின்றன தனியார் பேருந்து சேவைகள்

March 23, 2026

அதிகரிக்கப்பட்ட புதிய பேருந்து கட்டணம் போதுமானதாக இருப்பதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாளை (24)

jail

கொக்கட்டிச்சோலை – நெல்லிக்காடு கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் : இதுவரை ஐவர் கைது!

March 23, 2026

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளுவினாமடு, நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து பெண்ணொருவர் உயிருடன் மீட்கப்பட்டதோடு, அதே கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம்

Air Canada_4

விபத்துக்குள்ளான ஏயர் கனடா எக்ஸ்பிரஸ் விமானத்தின் இரு விமானிகள் உயிரிழப்பு: பயணிகள் சிலர் கவலைக்கிடம்!

March 23, 2026

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில் இன்று (23.03. 2026) அதிகாலை ஏயர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம்

DRO

ஆட்கள் பதிவுத் துறை முக்கிய அறிவிப்பு

March 23, 2026

ஆட்கள் பதிவுத் துறையின் கணினி அமைப்பில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஆட்கள் பதிவுத் துறையின் தலைமை அலுவலகம்

ddda

தனியார் நிலத்தில் காட்டுத் தீ

March 23, 2026

மலையகத்தில் தொடரும் வறட்சியான காலநிலையால் காடுகளுக்கு தீ வைக்கும் விஷமச் செயல் அதிகரித்துள்ளது. இதன்படி அட்டன் மண்டலக் கல்வி அலுவலகத்திற்குப்

sw

சுவிஸ் வாழ் 3 இலங்கையர்கள் இஸ்தான்புல் வீதி விபத்தில் பலி!

March 23, 2026

இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், அவர்கள் மூவரும் சுவிற்சர்லாந்தில் வசித்து வந்த இலங்கையர்கள் என அடையாளம்

tru

பதற்ற நிலையில் திடீர்த் திருப்பம்: ஈரான் மீதான தாக்குதல் ஒத்திவைப்பு

March 23, 2026

ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்ற நிலைக்கு இடையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

shiyamali

இலங்கையில் போதுமான அளவு விவசாய உற்பத்திகள் கையிருப்பில் உள்ளன!

March 23, 2026

வரவிருக்கும் பருவத்திற்குத் தேவையான விதைகள் விவசாயத் திணைக்களத்தில் உள்ளன. அடுத்த போகத்திற்குத் தேவையான விதை , நெல் பசளை வகைகள்