ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து (Queensland) மாநிலத்தில் பாராசூட் பாய்ச்சலில் ஈடுபட்ட ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் அவசர நிலை குறித்த காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
அண்மையில் நடந்த இந்தச் சம்பவத்தின்போது, பாய்ந்து குதித்த நபரின் உதவிப் பாராசூட் (Reserve Parachute) எதிர்பாராத விதமாக விமானத்தின் ஒரு பகுதியுடன் சிக்கி (Entangled) கொண்டது. இதனால் அவர் பெரும் அபாயத்தை எதிர்நோக்கினார்.
எவ்வாறாயினும், அந்த நபர் உடனடியாகச் செயல்பட்டு, சிக்கிக்கொண்ட கயிறுகளைத் துண்டித்து, உதவிப் பாராசூட்டை விடுவித்தார். பின்னர், அவர் தனது பிரதான பாராசூட்டின் (Main Parachute) உதவியுடன் பாதுகாப்பாகத் தரையிறங்கினார். இந்தச் சம்பவத்தின்போது அவருக்குச் சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அவசர நிலை நிகழ்ந்ததற்கான காணொளியே தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
By C.G.Prashanthan