கிவுல் ஓயா திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஒட்டுமொத்தமாக வெளியேறும் நிலை உருவாகும்!

கிவுல் ஓயா திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டால், எல்லைக் கிராமங்களில் நாங்கள் வாழ்வதில் பயனில்லை, நாங்கள் ஒட்டுமொத்தமாக வெளியேறும் நிலையே உருவாகும் என முல்லைத்தீவு எல்லைக் கிராமத்தை சேர்ந்த மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் ‘கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா’ என்ற தலைப்பிலான கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும்போதே மக்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.

இதன்போது மேலும் அவர்கள் கூறுகையில், 1984ஆம் ஆண்டு எமது பிரதேசங்களை விட்டு நாங்கள் வெளியேறி வெளி மாவட்டங்களில் வாழ்ந்த நிலையில் 2012ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்தபோது நாங்கள் விவசாயம் செய்த ஐந்து குள காணிகள் முற்றுமுழுதாக பறிக்கப்பட்டிருந்தது. ஊரின் பற்றால் நாங்கள் அங்கு வாழ்ந்தோமே தவிர அங்கு எமது வாழ்வாதார நிலங்கள் அனைத்துமே பறிக்கப்பட்டது.

எங்கள் நிலங்களை பறிப்பதற்காகவே மகாவலி எல் வலயம் உருவாக்கப்பட்டது. அந்த குள காணிகளை விடுவிப்பதற்கு அப்போது இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பல முயற்சிகளை எடுத்த போது மகாவலி அதிகார சபை விட்டுத்தர ஒப்புக் கொண்டிருந்த போதும் அப்போதிருந்த அரச அதிபரின் அக்கறையில்லாத செயல்பாட்டால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. அப்போது அக்கறையுடன் செயல்பட்டு இருந்தால் ஒரு குளத்தையாவது மீட்டிருக்க முடியும்.

கிவுல் ஓயா என்று எங்கள் காணிகள் அனைத்தும் பிடிக்கப்பட்டால் எங்கள் காணியை விட்டு நாங்கள் முற்று முழுதாக வெளியேற கூடிய நிலை உருவாகும். எல்லோருக்குமே கிவுல் ஓயா என்ற பெயரை மட்டுமே தெரியும். அங்கு நடைபெறுகின்ற விடயங்கள் மிக மோசமாக காணப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் தொடர்ச்சியான முயற்சியால் நாங்கள் இன்று வரைக்கும் அந்த கிராமத்தில் வாழக்கூடிய சூழல் இருக்கிறது.

கிவுல் ஓயா திட்டம் நடைமுறைக்கு வந்தால் நிச்சயமாக நாம் அங்கிருந்து பிரயோசனமில்லை. கிவுல் ஓயாத் திட்டத்தின்படி மின் வேலி அமைக்கிறார்கள். அந்த மின் வேலி அமைத்தால் எமது முக்கிய வாழ்வாதாரமான கால்நடைகள் பாதிக்கப்படும். மாடு அங்காலே செல்ல முடியாது. மழையை நம்பியே நாங்கள் விவசாயம் செய்கிறோம். விவசாய நிலங்களிலே எந்த அபிவிருத்தியையோ செய்துதர மகாவலி அதிகார சபை ஏற்றுக்கொள்ளாது.

அரச உத்தியோகத்தர்களுக்கு விருப்பு இருந்தா லும் மகாவலி அதிகார சபையின் தலையீட்டால் அபிவிருத்தி செய்யப்படுவதில்லை. கம வீதிகளை அபிவிருத்தி செய்து தந்தால் நாங்கள் நிலைத்து விடுவோம் என்ற காரணத்தினால் ஏதோவொரு வகையில் எங்களை துன்பப்படுத்தி அந்த கிராமத்திலிருந்து வெளியேற்றுவது அரசின் நோக்கம். பிரதேச செயலாளரால் எங்களுக்கான காணிக்குரிய அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தது.

அந்த பத்திரங்களின் உறுதியை தரலாம் என்று பொய் சாட்டு சொல்லி மீளவும் அரசாங்கத்தால் பெற்றுக் கொள்ளப்பட்டது. இன்று வரைக்கும் அந்த அனுமதி பத்திரங்கள் திரும்பி வ ழங்கப்படவில்லை. அதனை மகாவலியுடன் இணைத்து நாயாற்றுக்கு அங்காலே உள்ள மக்களை முற்றுமுழுதாக வெளியேற்றுவது அவர்களின் நோக்கம். அந்த கிராமத்தின் பரம்பரையாளர்கள் பலரும் வயது வந்து இறந்து வருகிறார்கள். அந்த கிராமத்தில் இருந்து வெளியேறும்போது எனக்கு 17 வயது. தற்போது 60 வயதாகிறது.

போராட்ட காலங்களில் தொடர்ச்சியாக அங்கு தொடர்பு இருந்தபடியால் இன்று வரைக்கு அதை விட்டுப் போகவில்லை. மண் பற்றோடு இருக்கி றோம். இருக்கிறோம். இளம் சமுதாயத்திற்கு கிராம பற்று குறைந்து கொண்டு செல்கிறது. அக்கறையி ல்லாமல் இருந்தால் எமது நிலம் எம்மைவிட்டுப்போகும். யாழ்ப்பாண மக்களுக்கு 3000 ஏக்கர் காணி இருக்கிறது. எம்மிடம் பட்டியல் இருக்கிறது. யாழ்ப்பாண த்தில் பலரைத் தேடித் தெரிந்தும் ஒரு குடும்பத்தையே சந்தித்திருக்கிறேன்.

அனுமதிப்பத்திர இலக்கம் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் போன்ற விபரங்கள் இருந்தாலும் அவர்களைத் தொடர்பு கொள்வதற்கு பல முயற்சிகளை எடுப்பதுடன் நாங்கள் வெளிநாடுகளில் தொ டர்புகொண்டு முயற்சிகளை மேற்கொள்கிறோம். அவர்களுடைய காணிகளை அபகரிப்பதற்கான முயற்சி நடக்கிறது. அங்குள்ள பெருமளவு காணி யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களின் காணி என்பது தெரியும். அவர்கள் வரமாட்டார்கள் என்றும் தெரியும்.

அந்த காணிகளை முக்கியமாக பிடிக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். எங்கள் கிராமம் உண்மையில் விடுபடுமாக இருந்தா ல் எத்தனையோ விடயங்கள் செய்யமுடியும். அந்த இடத்தை விடக்கூடாது என்பதற்காக போராடுகிறோம். பல துன்பங்களை கடந்து போராடுகிறோம் என்றனர்.

Arrest_1

ஐஸ் போதைப் பொருட்களுடன் இரு பெண்கள் கைது

March 3, 2026

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிவேரிய, எம்பரலுவ வடக்கு பகுதியில் 25

1

சடலமொன்று கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு

March 3, 2026

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் இன்று (03) காலை பாணந்துறை – கொழும்பு பழைய வீதியில்

kolla

கையிருப்பில் உள்ள எரிபொருள் அளவு; கொலன்னாவை முனையத்தின் விநியோக நிலைமை

March 3, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைக்

sunna

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்தவர் கைது!

March 3, 2026

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி காளிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்த நபர் ஒருவர் நேற்று (02)

minn

மின்னேரியாவில் பேருந்து விபத்து: 10 பேர் படுகாயம்!

March 3, 2026

ஹபரணை – பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை

Dau

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்கள் மதுபான விற்பனை குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்து

March 3, 2026

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்களில் உள்ள மதுபான உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கும்

fra

மார்ச்; மோசடி தடுப்பு மாதம் – நயாகரா பிராந்திய காவல் துறை

March 3, 2026

பல்வேறு வகையான மோசடிகள்/ஏமாற்றுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருந்து அவற்றை எப்படி மறுப்பது மற்றும் புகாரளிப்பது என்பதை அறிந்து கொள்ளுமாறு பொதுமக்களை

tr

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு மூன்று இலக்குகள் – டிரம்ப்

March 3, 2026

ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல்கள் ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட 4 முதல் 5 வாரங்களைக் காட்டிலும் நீண்ட காலம் நீடிக்கலாம் என

g

மயானத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி

March 3, 2026

கட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாயாவத்தை மயானத்துக்கு அருகிலுள்ள உட்பாதையொன்றில், புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், 4

kam

கமேனியின் மனைவியும் உயிரிழப்பு!

March 3, 2026

ரானின் கொல்லப்பட்ட அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவியும் உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்க –

cid

குற்றப்புலனாய்வு திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட பணிப்புரை

March 3, 2026

உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்

nali

அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

March 3, 2026

இலங்கையில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், தட்டுப்பாடு குறித்துப் பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என அரசு