கிளாடியா புயல் பிரித்தானியா முழுவதும் தொடர்ந்து நகர்ந்து வருவதால், தொடர்ச்சியான மற்றும் கனமழை பெய்யும் என்று வானிலை அலுவலகத்தின் அம்பர் எச்சரிக்கைகள் தெரிவிக்கின்றன.
சனிக்கிழமை GMT 06:00 மணி வரை பிரித்தானியா மற்றும் வேல்ஸின் பெரும்பாலான பகுதிகளில் பரந்த மஞ்சள் நிற கடுமையான வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரம் தெற்கு வேல்ஸ் போன்ற பல பகுதிகளை அண்மையில் பெய்த மழை மற்றும் வெள்ளம் பாதித்ததைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அது மாத்திரமன்றி, வேல்ஸின் சில பகுதிகளில் ஒரு மாதத்திற்கு மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பல தொடருந்து பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வார இறுதியில் தேசிய தொடருந்து தாமதங்கள் மற்றும் இரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து வெள்ளப்பெருக்கு தொடர வாய்ப்புள்ளதாக சுற்றுச்சூழல் நிறுவனம் தெரிவித்துள்ளது எனவும் சர்தேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.