கியூபெக் மாகாண அரசாங்கம் “புதிய மதச்சார்பின்மை மசோதா” ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இது கியூபெக் மாகாணத்தின் பொது நிறுவனங்களில் மதச்சார்பின்மை விதிகளைத் தீவிரமாக விரிவுபடுத்துகிறது.
குறிப்பாக, பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிலையங்களில் தொழுகை அறைகளுக்கு முழுமையான தடை விதிப்பதுடன், மத நம்பிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்ட உணவுகளைப் பொது நிறுவனங்கள் வழங்குவதைத் தடை செய்ய இந்த மசோதா முற்படுகிறது.
எதிர்வரும் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த மசோதா, பொது அமைப்புகளில் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் பல கடுமையான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கிறது.
குடியிருப்புத் தங்குமிடங்கள் போன்ற சில விதிவிலக்குகள் தவிர, அனைத்துப் பொது நிறுவனங்களிலும் தொழுகை நடைமுறைகளுக்கும், பிரத்தியேகத் தொழுகை அறைகளுக்கும் தடை விதிக்கப்படும் நிலை உருவாகவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.