பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பஸ் ஒன்றும், கார் ஒன்றும் கெப் வாகனம் ஒன்றும் மேல்மாகாண வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேல்மாகாண வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பத் மனம்பேரிக்கு சொந்தமாக மித்தெனியவில் உள்ள வீடொன்றி்ல வைத்து இந்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மித்தெனியவில் உள்ள காணி ஒன்றில் செப்டெம்பர் 5 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, “கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 50 ஆயிரம் கிராம் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பியல் மனம்பேரியின் சகோதரனான சம்பத் மனம்பேரி செப்டெம்பர் 06 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.