சுந்தர் சி இயக்கத்தில் கார்த்தி நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது கார்த்தி -சுந்தர் சி கூட்டணி நடக்காது என தெரிகின்றது. கார்த்தி அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என கடந்த ஒரு சில மாதங்களாகவே சொல்லப்பட்டு வந்தது.
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதற்கென்றே பெயர் பெற்றவர் தான் கார்த்தி. பருத்திவீரன் படத்தில் துவங்கி கடைசியாக அவரது நடிப்பில் வெளியான மெய்யழகன் வரை படத்திற்கு படம் கதைக்களத்தில் வித்யாசம் காட்டி வருகின்றார் கார்த்தி. அவரிடம் ஒரு கதையை சொல்லி திருப்தி செய்து ஓகே வாங்குவது மிகப்பெரிய விஷயம் என பலர் சொல்லி கேட்டிருக்கின்றோம்.
அந்தளவிற்கு கதை அறிவு கொண்ட கார்த்தி தற்போது ஒரே சமயத்தில் மார்ஷல், வா வாத்தியார் என இரு படங்களில் நடித்து வருகின்றார். இதற்கிடையில் கார்த்தி ஒரு பக்காவான கலகலப்பான கமர்ஷியல் படத்தில் நடிக்கும் முடிவை எடுத்து சுந்தர் சியின் இயக்கத்தில் நடிக்க ஆசைபட்டாராம். அதற்காக சுந்தர் சியிடம் அவர் கதை கேட்டதாகவும் ஒரு தகவல் உண்டு.