அஜித் மலேசியாவில் கார் ரேஸிங்கில் கலந்துகொண்டு வருகின்றார். அவரை அங்கு சென்று நடிகர் சிம்பு சந்தித்திருக்கிறார். அந்த வீடியோ தான் தற்போது ரசிகர்களால் சோஷியல் மீடியாக்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
அஜித் குமார் ஒருபக்கம் படங்கள் மறுபக்கம் கார் பந்தயங்கள் என பிசியாக இருக்கின்றார். தற்சமயம் மலேசியாவில் நடைபெறும் கார் ரேஸிங்கில் கலந்துகொண்டு வருகின்றார் அஜித். அங்கு இயக்குனர்கள் சிவா மற்றும் ஏ.எல் விஜய் ஆகியோரும் அஜித்துடன் இருக்கின்றனர். அஜித் கார் பந்தயங்களில் கலந்துகொள்வதை ஒரு ஆவணப்படமாக ஏ.எல் விஜய் இயக்கி வருகின்றார். மறுபக்கம் அஜித்தை வைத்து ஒரு விளம்பரத்தை சிவா இயக்கவுள்ளார்.
அதற்காக தான் இருவரும் மலேசியாவில் அஜித்துடன் இருக்கின்றனர் என தகவல்கள் வருகின்றன. தற்போது நடிகர் சிம்புவும் அஜித்தை மலேசியாவில் சந்தித்திருக்கிறார். அவர்கள் இருவரும் சந்தித்துக்கொள்ளும் வீடியோ இணையத்தில் காட்டுத்தீபோல பரவி வருகின்றது. சிம்புவும் தற்சமயம் மலேசியாவில் தான் இருக்கின்றார். இன்று காலை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிம்பு அதன் பிறகு அஜித் கார் பந்தயத்தில் கலந்துகொள்ளும் இடத்திற்கு சென்று அவரை சந்தித்திருக்கிறார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் மற்றும் சிம்பு சந்தித்துக்கொள்ளும் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் செம வைரலாக போய்க்கொண்டு இருக்கின்றது. சிம்பு ஆரம்பகாலகட்டங்களில் தன் ஒவ்வொரு படங்களிலும் அஜித் ரெபரென்ஸ் பயன்படுத்தி வந்தார். தான் அஜித்தின் தீவிரமான ரசிகர் என்பதை படத்திற்கு படம் குறிப்பிட்டு வந்தார் சிம்பு. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் தற்போது சந்தித்திருக்கும் வீடியோக்கள் இரு நடிகர்களின் ரசிகர்களாலும் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது.