இஸ்ரேலை இதுவரை முறைப்படி அங்கீகரிக்காத பாகிஸ்தான், அந்த நாட்டின் காசா அமைதி திட்டத்துக்கு உதவுவதற்கு, 20 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்ப உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே இரண்டாண்டுகள் போர் நடந்து வந்தது. இப்போர் அமெரிக்காவின் 20 அம்ச அமைதி திட்ட முன்மொழிவின் கீழ், இம்மாதம் முதல் வாரத்தில் நிறுத்தப்பட்டது.
அமெரிக்காவின் திட்டத்தின்படி, காசாவில் சர்வதேச நாடுகள் அடங்கிய அமைதிப் படை பாதுகாப்புப் பணியில் ஈடுபடும். என்பதற்கு காசாவுக்கு ஆதரவான முஸ்லிம் நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை முழுமையாக அகற்றும் நோக்கத்துடனேயே, இந்த அமைதிப் படை செயல்படும் என்று அவை கூறியுள்ளன. முதல்கட்டமாக, இந்தப் படையில் 4,000 முதல் 5,000 வீரர்கள் வரை இருப்பர் என்றும், 20,000 பேர் வரை தேவைப்படலாம் எனவும் கூறப்படுகிறது.