மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி மீன் சந்தையில் செவ்வாய்கிழமை (20) அன்று மனித நுகர்வுக்கு ஒவ்வாத பழுதடைந்த நிலையில் விற்பனை செய்யப்பட்ட 16Kg கீரி மீன்கள் கைப்பற்றப்பட்டு பொதுச் சுகாதார பரிசோதகர்களால் உடனே அழிக்கப்பட்டன.
களுவாஞ்சிக்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் மூலம் இந்த பழுதடைந்த மீன்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதன் போது வியாபாரிக்கு கடுமையான எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.